மனோஜை லாக் செய்த முத்து… ரோகிணி உங்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்…

by Akhilan |
மனோஜை லாக் செய்த முத்து… ரோகிணி உங்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்…
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் சாப்பிட வர மனோஜ் மற்றும் ரோகிணியை கூப்பிட்டியா. போய் கூப்பிட்டு வா என்கிறார் விஜயா. மீனா அழைக்க போக முத்து பிடித்து சாப்பிட உட்கார வைக்கிறார். அவ உட்கார்ந்துட்டா யார் பரிமாறுவாங்க என்கிறார். அவங்க அவங்களுக்கு கை இருக்கு.

நீ அமைதியா சாப்பிடு என்கிறார் அண்ணாமலை. அப்போ மனோஜ் அங்கு வர கடையின் பெயரை பற்றி யோசிக்கிட்டு இருந்தோம் என்கிறார். அதுவே இப்போதானா பண்ணுறீங்க. மீனா பாட்டி பெயரை வைக்கலாம் என்கிறார். மனோஜ் ஆனா அது பழைய பெயரா இருக்கே என மனோஜ் தயங்க அண்ணாமலை உன் இஷ்டத்துக்கே பெயர் வை எனக் கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: சினிமாவே சத்திரம்னு வந்துட்டயா?… இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி.. நடந்தது இதுதான்!..

தன் பெயரை வைப்பாங்க என விஜயா எதிர்பார்த்து என்ன பெயர் வைக்க போற எனக் கேட்க மனோஜ் இனிமே தான் யோசிக்கணும் என்கிறார். இதனால் விஜயா முகம் மாறிவிடுகிறது. இதை முத்து கவனித்துவிடுகிறார். பின்னர் ரூமில் இருக்கும் மனோஜ் உங்க அப்பா பெயரை வைக்கலாமா எனக் கேட்க அவர் காசு கொடுத்தா வைக்கலாம். அப்போ ஜீவா பெயரை தான் வைக்கணும் என்கிறார் மனோஜ்.

அப்போ உன் பழைய காதலியை மறக்க முடியலையா என ரோகிணி திட்டுகிறார். மீண்டும் அத்தை பெயரையே வைக்கலாம் என்கிறார். அந்த நேரத்தில் முத்து வெளியில் எதேர்ச்சையாக போக இவர்கள் பேச்சை கேட்டு நிற்கிறார். அப்போ மனோஜ், அம்மா பெயர் வேண்டாம். உன் கடையும் போச்சு மீனா கடையும் போச்சு என்கிறார். அதை ரெக்கார்ட் செய்யும் முத்து உள்ளே வருகிறார்.

கடைக்கு என்ன பெயர் வைக்க போறீங்க எனக் கேட்க யோசிச்சிட்டு இருப்பதாக கூறுகிறார். அம்மா பெயரை தான் வைக்கணும் எனக் கூற நாங்க தான் முடிவெடுப்போம் என ரோகிணி கூற ரெக்கார்டை காட்டுகிறார். மனோஜ் நான் தப்பா எதுவும் சொல்லலையே என சமாளிக்கிறார். உன் பொண்டாட்டி கடை போனதுக்கு காரணம் அவங்க தான். மீனா கடை போனதுக்கு காரணம் யாரோ வயித்தெரிச்சல் பிடிச்சவங்க.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

அம்மா பெயரை தான் கடைக்கு வைக்கணும் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். இதை கவனித்து கொண்டு இருக்கும் மீனா அத்தைக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது. நீங்களும் அவங்களை வம்புக்கு தான் இழுப்பீங்க. அப்புறம் என்ன இந்த பாசம். என்னமோ நடந்து இருக்கு எனக் கேட்கிறார். முத்து பிளாஷ்பேக்கை சொல்ல வர ஆனால் சுதாரித்து நிறுத்திவிடுகிறார். சிலர் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா சிலதை மறைக்கணும் என்கிறார்.

நீ போய் காபி எடுத்துட்டு வா எனக் கூற அப்போ என்னை நீங்க பொண்டாட்டியா ஏத்துக்கலை என்கிறார். நான் வெளியில் போய் காபி குடிச்சிக்கிறேன் என கடுப்பில் முத்து கிளம்ப போக மீனா இருங்க நானே போடுறேன் எனப் போகிறார். இதையடுத்து, வீட்டுக்கு வரும் ரவி ரூமுக்கு செல்கிறார்.

அங்கு ஸ்ருதி ரவியின் டிரெஸை போட்டு டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். என்ன இது எனக் கேட்க உன் மேல இருக்க லவ் தான் காரணம். நீனும் என் நைட்டியை போடு எனக் கொடுக்கிறார். ரவியும் அதைப் போட்டு காட்டி நிரூபிச்சிட்டேன் என்கிறார். இதோட போய் டீ போட்டு எடுத்துட்டு வா என அனுப்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

Next Story