மீண்டும் ரூம் பிரச்னையை கிளறிவிட்டாங்களே… எண்ட்டே இல்லையா சார் இதுக்கு…

by Akhilan |
மீண்டும் ரூம் பிரச்னையை கிளறிவிட்டாங்களே… எண்ட்டே இல்லையா சார் இதுக்கு…
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் சத்யா வந்து மாலை, டிரெஸுடன் அங்கு நிற்கிறார். எல்லாரும் அதிர்ச்சியாக நிற்க முத்து பிரச்னையை சமாளிக்க முடிவெடுக்கிறார். அண்ணாமலை நீ காலேஜ் போனதா சொன்னாங்க எனக் கேட்கிறார். காலேஜ் தான் முடிச்சிட்டு வந்தேன். என் காசுல அக்கா, மாமா கல்யாண நாளுக்கு சொந்தமா சம்பாரிச்சு வாங்கிட்டு வந்திருக்கேன் என்கிறார்.

முத்துவிடம் உங்களுக்கு பிடிச்ச கலருல சட்டை வாங்கிட்டு வந்திருக்கேன் எனக் கொடுக்க முத்து அதை பிரித்து போட்டு கொள்கிறார். முத்து சத்தம் போடுவார் என நினைத்த சத்யா இதை பார்த்து ஏமாந்து போகிறார். உங்க யாருக்காவது மாலை வாங்கணும்னு தோணுச்சா என் மச்சான் வாங்கிட்டு வந்திருக்கான் எனக்கூறி அதை வாங்கி போட்டுக் கொள்கிறார். மீனாவிடம் ஒரு மாலையை கொடுத்து தனக்கு போட சொல்கிறார்.

இதையும் படிங்க: கண்ணதாசன், எம்.எஸ்.வி. இருவரின் ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிய பாடல்… அட செம மாஸா இருக்கே..?

மீனா குடும்பத்தினர் கிளம்ப சத்யாவின் அருகில் வரும் முத்து வெறுப்பேத்த தானே இத செஞ்ச. எனக்கு உன் மேல கோவப்பட்டு இருக்கு தெரியும். ஆனா உங்க அக்கா கஷ்டப்படுவா. எனக்கு என் பொண்டாட்டி சந்தோஷம்தான் முக்கியம். இன்னொரு தடவை இதே மாதிரி ஏதாச்சும் ட்ரை பண்ணு கையோடு சேர்ந்து காலையும் ஒடச்சி விட்ருவேன் என்கிறார். கிச்சனில் ரோகிணி இருக்க அங்கு வருகிறார் விஜயா.

நம்ம வீட்ல எந்த பங்க்ஷன் நடந்தாலும் உங்க சைடுல இருந்து மட்டும் ஆளே வரதில்லை என வருத்தப்படுகிறார். உனக்கும் அம்மா இருந்தா வந்து இருப்பாங்களா எனக் கூற ரோகிணிக்கு தன்னுடைய உண்மையான அம்மாவின் ஞாபகம் வருகிறது. விஜயா சென்றதும் அவருக்கு கால் செய்து உன்னையும் கிருஷையும் இந்த வாரம் வந்து பார்க்கிறேன் என்கிறார்.

பின்னர் பாட்டி முத்து மற்றும் மீனாவிற்கு சுற்றி போட சொல்ல விஜயா ரோகிணி மற்றும் ஸ்ருதிக்கும் சுற்றி போடுங்கள் என்கிறார். விஜயாவை திட்டி விட்டு பாட்டி குடும்பத்தினர் எல்லாரையும் நிற்க வைத்து சுற்றி விடுகிறார். பின்னர் முத்து மற்றும் மீனா மாடிக்கு தூங்க செல்ல இன்னைக்கு கீழே படுங்க என்கிறார் அண்ணாமலை. வேணாம் பா உனக்கு ஹால் ஒத்துக்காது என முத்து கூற ஏன் முத்து மட்டும்தான் என்கிறார் பாட்டி.

இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..

உடனே விஜயா ஸ்ருதி மற்றும் ரோகிணி காலைல எந்திரிச்சு வேலைக்கு போகணும் என்கிறார். முத்துவின் தான் காலைல கார் ஓட்ட போடணும். மீனாக்கும் பூக்கடையில் வேலை இருக்கும் என்கிறார். மனோஜ் தன்னுடைய ரூம் போய்விடுமோ என நைசாக ரோகிணியை அழைக்க அவரை கலாய்க்கிறார் முத்து. ரவி நான் மாடில படுத்துகிறேன் என செல்ல போக விஜயா அவரை தடுத்து விடுகிறார்.

பின்னர் முத்து மற்றும் மீனா நாங்களே மாடியில் படுத்துகிறோம் என சொல்லி கிளம்பி விடுகின்றனர். அப்போ வரும் ஸ்ருதி மீனாவிடம் டெண்ட்டை கொடுத்து விட்டு செல்கிறார். மாடிக்கும் வரும் மீனா, முத்துவிடம் டெண்ட்டை கொடுக்க செட் செய்து அதில் உட்கார்ந்து இருவரும் ரொமாண்ட்டிக்காக பாட்டு பாடிக்கொண்டு இருக்கின்றனர். கீழே ரூமில் இருக்கும் அண்ணாமலையிடம் ரூம் குறித்து பேசுகிறார் பாட்டி. எதுவும் செலவுக்கு வேண்டும் என்றாலும் கீழு எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..

Next Story