More
Categories: Cinema News latest news television

மனோஜ் மற்றும் ரோகிணியை கடையை திறந்தாச்சு… கடுப்பில் ரசிகர்கள்… இதெல்லாம் தேவையே இல்லாத ஆணிதான்!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணியின் கடை திறப்பு விழா நடக்கிறது. விஜயா ரிப்பனை வெட்டாமல் வாசலில் பார்த்துக் கொண்டே ஒரு முக்கியமான ஆளுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். சரியாக ஸ்ருதியின் அம்மா வந்து இறங்க விஜயா வாசல் வரை சென்று அவரை வரவேற்று வருகிறார்.

அதன் பிறகு ரிப்பனை வெட்டி கடையை திறக்கின்றனர். அண்ணாமலை மீனாவிடம் உங்க வீட்டிலிருந்து யாரும் வரல என கேட்க அவங்க வராமல் இருப்பதே நல்லது தான் என்கிறார் விஜயா. இதனால் கடுப்பாகும் அண்ணாமலை வாய மூடு என திட்ட இப்படி அவமானப்படுவாங்கன்னு தான் மாமா நான் யாரையும் கூப்பிடல என்கிறார் மீனா.

இதையும் படிங்க: சூரி மாதிரி இல்லை!.. எப்பவுமே பிரபாஸ் சீனியர் நடிகர்களை எப்படி மதிக்கிறாரு பாருங்க!..

அதை எடுத்து மீனா கடையை சுற்றி பார்த்து கம்மியான விலையில் ஒரு மிக்ஸியை எடுக்கிறார். ஸ்ருதியின் அம்மா ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஏசியை வாங்கிக் கொண்டு வருகிறார். முதலில் மீனா வந்தாலும் அவரை தள்ளிவிட்டு ஸ்ருதியின் அம்மாவிற்கு மனோஜ் பில் போடுகிறார். இதை பார்க்கும் பாட்டி விஜயாவை தள்ளிக்கொண்டு போய் அவரை திட்டி தீர்க்கிறார்.

இதை அடுத்து மனோஜ் கடையில் இருந்த பழைய ஊழியர்களை வேலையில் விட்டு துரத்துகிறார். எனக்கு புது ரத்தம் தான் வேணும் எனக்கு ஊறி சில இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகிறார். பழைய ஊழியர்கள் மனோஜ் இனிமே கஷ்டப்படுவான் என சபித்து விட்டு செல்கின்றனர். அதன் பிறகு மனோஜ் மற்றும் ரோகிணி கிளம்பி வீட்டிற்கு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேட்டி கட்டி ஆடிய ஒரே நடிகர் இவர்தானாம்! இவ்ளோ வேடிக்கை நடந்துருக்கா?

வீட்டிற்கு வந்து உடனே தூங்கணும் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என சீன் போடுகிறார் மனோஜ். இருவரையும் வெளியில் நிற்க வைத்து விஜயா ஆரத்தி எடுக்கிறார். இனிமேல் டயர்ட் எல்லாம் பறந்து போயிடும் என சந்தோஷமாக கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Published by
Akhilan

Recent Posts