முத்துவுக்காக சீரியல் பார்க்கும் அன்பர்களே… சிறகடிக்க ஆசை பக்கம் போகாதீங்கப்பா!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை குடிகாரன் என சித்தரித்த வீடியோவை சத்யா மீனாவுக்கு காட்டுகிறார். அதில் முத்துவை பற்றி தப்பாக வந்த கமெண்ட்களை படித்து உன் புருஷனை தான் உங்களை காரி துப்புவது எனக்கு கூற மீனா கோபமாக எழுந்து செல்கிறார்.
முத்து கஸ்டமரை ஏற்றிக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்க அவர்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு காரை ஓரங்கட்ட சொல்லி இறங்கி விடுகின்றனர். தொடர்ந்து ஆர்டர்கள் வந்தாலும் சிறிது நேரத்திலேயே அவர்களும் கால் செய்து கேன்சல் செய்து விடுகின்றனர்.
இதையும் படிங்க: அரண்மனை 4 கல்லா கட்டுச்சா?.. காணாமல் போச்சா?.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?..
வீட்டுக்கு வரும் மனோஜ் இந்த வீடியோவை போட்டு காட்டி முத்து வேலை சமயத்திலேயே குடிப்பதாக ஏற்றி விடுகிறார். ரவி ட்யூட்டி சமயத்தில் அவன் குடிக்க மாட்டான் என சப்போட்டா பேசினாலும் அதான் வீடியோவை இருக்கே என்கிறார் மனோஜ். அவன் நைட் வரும்போது கார் ஓட்டிட்டு தானே குடித்துவிட்டு வருவான் என்கிறார் மனோஜ்.
விஜயா என்ன காரியம் பண்ணிட்டு இருக்கான். இதனால நம்ம குடும்பம் மானமே போகப்போகுது. சொந்தக்காரங்க எல்லாம் காரி துப்ப போறாங்க என்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி அப்பா போன் பண்ண இவருக்கும் விஷயம் தெரிஞ்சுட்டா என ஷாக் ஆகிறார். பின்னர் விஜயாவுக்கு பார்வதி கால் செய்து விஷயத்தை கேட்கிறார். மனோஜ் செஞ்ச சின்ன சின்ன விஷயத்தை வீட்டில் பிரச்சினையா பேசின முத்து.
இதையும் படிங்க: அறிவிப்போடு நின்று போன ரஜினியின் திரைப்படங்கள்! மோதலில் முடிந்த திரைப்படத்தின் கதை தெரியுமா?
இப்ப இவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்காரு என அண்ணாமலையிடம் கேள்வி கேட்கிறார் ரோகிணி. அந்த வீடியோவை பார்த்த ஸ்ருதியின் அப்பா கமிஷனருக்கு கால் செய்து இதை மாதிரி ஆட்களை கார் ஓட்ட நீங்க அனுமதிக்க கூடாது என புது திட்டம் வகுக்கிறார். உடனே அங்கு வரும் முத்துவை காவலர்கள் லாக் செய்து அவர் லைசென்ஸ் பிடுங்கிக் கொண்டு காரை எடுத்து சென்று விடுகின்றனர். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.