விஜயாவை அலறவிட்ட மீனா… கலங்கி நிற்கும் முத்து… என்ன நடக்க போகுதோ?!!

by Akhilan |
விஜயாவை அலறவிட்ட மீனா… கலங்கி நிற்கும் முத்து… என்ன நடக்க போகுதோ?!!
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா தொடர்ச்சியாக பாத்ரூமுக்கே சென்று கொண்டு இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் பார்வதியிடம் விஜயா வயிறு எரியுது என்கிறார். அதான் தெரியுமே என்க இல்ல நிஜமாவே வயிறு எரியுது என்கிறார்.

அதன்பின்னர், மாற்றி மாற்றி அவர் பாத்ரூம் செல்ல மனோஜ் சமைக்க சொல்ல வருகிறார். அவர் சொல்வதில் கடுப்பாகும் விஜயா அட போடா நீ வேற நிலைமை தெரியாம என்கிறார். பின்னர் மனோஜ் மற்றும் ரோகிணி வர விஜயா பாத்ரூம் செல்கிறார்.

இதையும் படிங்க: குறி வச்சாச்சு.. வெளியான ‘தக் லைஃப்’ சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது வேற ரகம்

அண்ணாமலை வந்து உங்க அம்மாக்கு என்னடா ஆச்சு என கேட்க அப்போதும் விஜயா பாத்ரூமுக்கு ஓடி விடுகிறார். பின்னர் முடியாமல் அவர் துவண்டு விழ அவை தொட்டுப் பார்க்கும் மனோஜ் காய்ச்சல் அடிப்பதாக கூறி டாக்டரை அழைக்க செல்கிறார். அந்த நேரத்தில் மருந்து வாங்கிக் கொடுத்த பெண்ணை வந்து சந்திக்கிறார் மீனா.

தன் அத்தை அதை சாப்பிட்டு விட்டதாக கூறி எதுவும் ஆகுமா என கேட்க அதெல்லாம் ஒன்னும் ஆகாது. வயிற்றைக் கலக்கி பாத்ரூம் போகும் அவ்வளவுதான். இரண்டு நாட்களுக்கு காரணம் இல்லாமல் கஞ்சி வைத்துக் கொடு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். விஜயாவை செக் பண்ண வந்த டாக்டரும் சாப்பிட்ட எதுவோ ஒத்துக்காமல் போய்விட்டதாக கூறுகிறார். கஞ்சி வைத்து கொடுத்தால் சரியாகிவிடும் எனக்கூறி செல்கிறார்.

வீட்டிற்கு வரும் மீனாவிடம் எங்க போன அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்கிறார் முத்து. அண்ணாமலை விஜயாவிடம் அப்படி என்னதான் சாப்பிட்டு தொலைச்ச எனக்கு இருக்க ஆரஞ்சு ஜூசை தான் குடித்தேன் என்கிறார். மீனா அதில் முத்துவிற்கு மருந்து வைத்திருந்த விஷயத்தை கூற எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். உடனே மனோஜ் அவன் அதையே சரக்குல தான் கலந்து குடிப்பான் என்கிறார்.

இதனால் முத்து கலங்கி மாடிக்கு சென்று விடுகிறார். ரோட்ல குடிச்சிட்டு புருஷன் விழுந்து கிடப்பாங்க. அவங்களை சரி பண்ண அவங்க பொண்டாட்டியும் இப்படித்தானே செய்வாங்க. நானே இப்ப அந்த நிலைமைக்கு வந்துட்டேன் என கண்கலங்குகிறார் மீனா. நீ வாங்கி கொடுத்த காரை நான் ஓட்டும்போது எப்படி மீனா குடிப்பேன். நான் குடிக்கலை என்கிறார் முத்து.

இதையும் படிங்க: விடாமுயற்சி பட ஹீரோயின் பார்ல அடிக்கிற கூத்தை பாருங்க!.. தொடையழகை காட்டி டார்ச்சர் வேற பண்றாரே!..

அதன் பிறகு விஜயாவுக்கு கஞ்சி வந்து கொடுக்கிறார் மீனா. உன் கையால நான் எதுவும் குடிக்க மாட்டேன் நீ எதையாவது கலந்து வச்சிருப்ப என்கிறார் விஜயா. அதை குடித்து காட்டும் மீனா இதில் எதுவும் இல்லை. இதுக்கு மேல குடிக்கிறது உங்க இஷ்டம் எனக் கூறி செல்கிறார். அவர் சென்றதும் பார்வதியை போய் அதை எடுத்து வரச் சொல்கிறார் விஜயா.

அடுத்ததாக ஸ்டேஷனுக்கு வரும் முத்து காரை கேட்க அங்கிருக்கும் கான்ஸ்டபிள் ஒரே நாளில் பேமஸ் ஆயிட்டியே எனக் கூறி கலாய்க்கின்றனர். பின்னர் முத்துவை காபி வாங்கிட்டு வர சொல்வதும் பேப்பர் வாங்கிட்டு வர சொல்வதும் என தொடர்ந்து வேலையாக விட்டு அவமானப்படுத்துவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story