ஒருவழியா முத்து பஞ்சாயத்துக்கு முடிவு வந்திருச்சுப்பா… மீனா செம கெத்துமா நீ…

by Akhilan |
ஒருவழியா முத்து பஞ்சாயத்துக்கு முடிவு வந்திருச்சுப்பா… மீனா செம கெத்துமா நீ…
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்க அங்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். சார் நான் குடிக்கலை என முத்து கூற அதெல்லாம் தெரியாது. எதுவா இருந்தாலும் கோர்ட்டில் போய் பார்த்துக்கோ என்கிறார். இதனால் கலங்கி ஷெட்டுக்கு வருகிறார் முத்து.

டாஸ்மார்க்கிற்கு வரும் மீனா ஓனருக்காக காத்திருக்கிறார். அப்போ அங்கு செல்லும் யூட்யூபர் மீனாவை பார்த்து குடிக்க வந்ததாக தவறாக நினைத்து வீடியோ எடுக்கின்றனர். எப்போலேந்து இந்த பழக்கம். குடிக்கலைனா கை நடுங்குமா என கேள்வியாக கேட்கின்றனர். இந்த வீடியோ ரெக்கார்ட்டா ஆகிட்டு இருக்கா என மீனா கேட்கிறார்.

இதையும் படிங்க: சாய் பல்லவி பர்த்டே!.. அந்த பட அப்டேட் வருமா?.. எதிர்பார்ப்புகளை எகிற விடும் ரசிகர்கள்!..

அவர்களும் ஆமாம் எனக் கூற உங்களை மாதிரி விஷயம் தெரியாம வீடியோ எடுத்ததால தான் என் புருஷன் பிரச்னையில இருக்காரு. அவரை காப்பாத்துவதற்கு தான் இங்க வந்திருக்கேன் என்கிறார் மீனா. உடனே அவரை சிங்கப்பெண் என ப்ளேட்டை மாற்றி பேசுகின்றனர்.

டாஸ்மாக் ஓனரை சந்திக்கும் மீனா தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறி என்னை உங்கள் பெண் போல நினைத்து சிசி டிவி வீடியோவை காட்டுமாறு கேட்கிறார். அவரும் வீடியோவை காட்டுகிறார். அதை பார்க்கும் மீனா, முத்து குடிக்கவில்லை என்பதை புரிந்துகொள்கிறார். அவரை மாட்டி விட சிட்டி செய்த வேலை என்பதையும் கண்டுப்பிடிக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா எங்கிட்ட கடைசியா பேசுன வார்த்தை அதுதான்… நெஞ்சைத் தொட்டுட்டாரே பி.வாசு..!

உடனே அந்த வீடியோவை ரவிக்கு அனுப்ப சொல்லி அவரையும் செட்டிற்கு வரச் சொல்லி கிளம்புகிறார் மீனா. நண்பர்களிடம் முத்து புலம்பி கொண்டு இருக்கும் போது ரவி வருகிறார். நீ எங்கடா இங்க எனக் கேட்க அண்ணி தான் வரச்சொன்னாங்க. உன் மேல தப்பு இல்லனு கண்டுப்பிடிச்சிட்டாங்க என்கிறார். அப்போ அங்க வரும் மீனா முத்துவை கட்டிப்பிடித்து என்ன மன்னிச்சிடுங்க. நானும் உங்களை தப்பா நினைச்சுட்டேன் என கண்ணீர் விடுகிறார்.

பின்னர் டாஸ்மாக்கில் கிடைத்த வீடியோவை போட்டு காட்டி முத்துவையும் பேசவைத்து அதை வீடியோவாக எடுக்கின்றனர். தான் தப்பு செய்யவில்லை என்பதையும் என் மனைவி தான் கண்டுபிடித்து இருக்கிறார் எனவும் கண்ணீர் கலங்க முத்து பேசுகிறார். ரவி அந்த வீடியோவை இணையத்தில் பரப்ப மீனாவின் அம்மா அதை பார்த்து கண்ணீர் விடுகிறார். அண்ணாமலையும் அந்த வீடியோவை பார்த்து கண்கலங்குவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story