எல்லார் வாழ்க்கையில் மொத்தமாக பிரச்னையை பத்த வச்சாச்சு போல.. சிறகடிக்க ஆசை ஷாக்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவுக்கு கால் செய்கிறார். இதையடுத்து ரவி விஷயம் குறித்து பேச அவரும், முத்துவும் ஒத்துக்க மாட்டாங்க என்கிறார். சீக்கிரமா முடிவு எடு. ஸ்ருதி அவனை வீட்டோட மாப்பிள்ளையா கூப்பிட்டு போயிட்டா கஷ்டம் என்கிறார்.

சரி இப்போ ரவிட்டையாது பேசுனீயா என்க இல்லை என்கிறார் விஜயா. அவன் வேலை செய்யும் இடத்தில் போய் பார்க்கலாம் என்கிறார் பார்வதி. அப்போ நீயும் கூட வா என்க சரியென என போனை வைத்து விடுகின்றனர். அடுத்து மனோஜ் ஆபிஸ் கிளம்பி கொண்டு இருக்கிறார். இந்த மாதம் எத்தனை கார் சேல் செய்த எனக் கேட்கிறார் ரோகினி.

இதையும் படிங்க: படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..

15 கார் விற்று விட்டதாக மனோஜ் பொய் கூறுகிறார். பரவாயில்லையே, அப்போ உன் முதலாளியிடம் சம்பளம் அதிகமா வேணும்னு கேளு மனோஜ். கண்டிப்பா தருவாங்க என்கிறார். இதனால் அதிர்ச்சி ஆகிறார் மனோஜ். அவரை சமாளித்துவிட்டு வெளியில் வர அண்ணாமலை கார் வாங்கிக்க வேண்டியது தானே என்கிறார்.

அப்போ ரோகினி நல்ல ஐடியாவா இருக்கே. உன் முதலாளிக்கிட்ட கேளு. நல்ல ரேட்ல தருவாரு எனக் கூறுகிறார். இதனால் மனோஜுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் முழுக்கிறார். அப்போ விஜயா இன்னைக்காது வேலையோட வா எனச் சொல்லி அனுப்புகிறார்.

இதை கேட்கும் அண்ணாமலை என்னவென விசாரிக்க சமாளித்து விடுகிறார். அப்போ மீனா நான் கோயிலுக்கு போயிட்டு வருவதாக கிளம்பி விடுகிறார். பார்வதி வர அவருக்கு சாப்பாடு போட்டு கொடுத்து குழம்பை மூடாமல் போய் விடுகிறார் விஜயா. அதில் மேலே இருந்த பல்லி விழுந்து விடுகிறது.

இன்னொரு பக்கம் ஸ்ருதிக்கு ரவி சமைத்து கொடுக்கிறார். அப்போ அவர் தோழி கால் செய்ய ஸ்ருதி பேசிக்கொண்டு இருக்கிறார். கல்யாணம் செஞ்சிக்கலாம். ஆனா இப்போ குழந்தையெல்லாம் பெத்துக்காத என அட்வைஸ் செய்கிறார். தானும் இப்போ குழந்தை பெத்துக்கிற ஐடியாவில் இல்லை. நடக்குமானே தெரியலை என்கிறார். இதைகேட்டு கொண்டு இருந்த ரவி அதிர்ச்சி அடைகிறார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க போறான்னு ஒப்பாரி வச்ச ரஜினி… நடிகவேள் பட்டத்தை ஏன் தூக்கி கொடுக்கிறாரு?

மீனா நேராக பைனான்சியரை பார்க்க வர அவர் மீனாவை காக்க வைக்கிறார். அவரும் பார்த்து விட்டு செல்லணும் என்ற பிடிவாதத்தில் அமர்ந்து இருக்கிறார். ரவியை பார்க்க ஆட்டோவில் ரெஸ்டாரெண்ட் போய் கொண்டிருக்கின்றனர் பார்வதியும், விஜயாவும்.

அப்போ ரோட்டியில் ரவியை பார்த்து விட்டு பேச ஆட்டோவில் இருந்து இறங்கிவிடுகின்றனர். ஏன்பா இப்படி பண்ண எனக் கேட்கிறார் பார்வதி. இப்படி நடக்குமுனு நினைக்கல என்கிறார் ரவி. எல்லாம் அந்த மீனாவால என விஜயா சொல்ல ரவி அவங்களுக்கு எதுவுமே தெரியாது என்கிறார்.

இருந்தும் நீ அவளை விட்டா கொடுக்க போற. சரி வீட்டுக்கு வா எனக் கூப்பிட்டு விடுகிறார் விஜயா. என்னை மட்டும் கூப்பிடுறீங்களா? என ரவி தயங்கிக்கொண்டே கேட்க விஜயாவும், பார்வதியும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: பொன்னம்பலம் அடித்ததில் மருத்துவமனையில் அட்மிட் ஆன கேப்டன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!...

 

Related Articles

Next Story