மகனுக்காக களத்தில் இறங்கிய அண்ணாமலை…பேரம் பேசிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் சூப்பர் ட்விஸ்ட்..!

Published on: November 20, 2023
---Advertisement---

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுக்கு வந்து பைனான்சியர் வீட்டில் நடந்த விஷயத்தினை போட்டு உடைக்கிறார். அவர் மனைவி எனக்கு ரொம்ப நாள் கஸ்டமர். அங்க வந்து மீனா காரை அவரிடம் கேட்டு கெஞ்சினார்.

அவங்க பொண்ணு எடுத்துட்டு போனதா முத்து சொன்னது பொய். உடனே விஜயா அப்போ இத்தனை நாள் வேலை இல்லாமல் இருந்தியா? இப்ப பொய் சொல்ல கூட ஆரம்பிச்சுட்டியா? எல்லாம் உன் பொண்டாட்டி சொல்லி கொடுத்தாலா என்கிறார் விஜயா.

Also Read

இதையும் படிங்க: திருமணமானவர்னு தெரிஞ்சும் அவர் கூட போனதுதான் நான் செஞ்ச தப்பு! நடிகையின் வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?

இதில் மனோஜ் நானும் ரோகினியும் தான் வேலைக்கு போறோம். எங்க காசுல தான் நீங்க உட்கார்ந்து தின்னுறீங்க என நக்கலாக பேசுகிறார். இதை தொடர்ந்து நீ பேசாம பாருக்கு வேலைக்கு போ. அதுதான் உனக்கு சரியாக இருக்கும் என நக்கலாக பேசுகிறார். 

இதை கேட்ட மீனா, போதும் நிறுத்துங்க. அவர் ஒன்னும் சும்மா இல்லை. பக்கத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் கார் துடைக்கும் வேலை செய்கிறார். சும்மா ஒன்னும் இல்லை. மாமா மனசு கஷ்டப்படுவாரு தான் பைனான்சியர் கார் எடுத்துட்டு போயிட்டதாக பொய் சொன்னாரு.

நான் போய் பார்த்தேன் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு என்று மீனா சொல்கிறார். இதை தொடர்ந்து ரூமுக்கு சென்ற முத்து நீ ஏன் பைனான்சியர் வீட்டுக்கு போன, அவர் என்ன வார்த்தை சொன்னாரு தெரியுமா எனக் கேட்கிறார். பணத்தை வாங்கிட்டு போய்டுவ திடீர்னு உங்க அப்பா செத்துட்டா. அந்த பணம் எனக்கு எப்படி திரும்பி கிடைக்கும் என்றார்.

இதையும் படிங்க: பிரபலத்துக்கு ஆசையாக கொடுத்த பரிசு.. அவர் சொன்ன பதிலால் விழுந்து விழுந்து சிரித்த விவேக்.. சுவாரஸ்ய சம்பவம்..!

அவரோ 5 லட்சம் தாங்க எனக் கேட்க கடைசியில் பேரம் பேசி நாலரை லட்சத்துக்கு முடிக்கின்றனர். வீட்டுக்கு வந்த அண்ணாமலை விஜயாவிடம் எனக்காக தான் முத்து அவன் காரை வித்தான். இப்ப அவன் கஷ்டபடுவதாக சொல்லி வருத்தப்படுகிறான். அவனுக்கு அந்த காரை திருப்பிக் கொடுக்கணும். வீட்டு பத்திரத்தை வைத்து கொடுத்திடலாம் என்கிறார்.

ஆனால் விஜயா எனக்குன்னு இருக்கறதே வீடு ஒன்னு தான். அப்படின்னா என்னோட நகையும் சேர்த்து வாங்கி கொடுங்க. அதனால் 6 லட்சத்துக்கு வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்கிறதுனா எடுத்துட்டு போங்க என்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.