மனோஜ் போட்ட பிச்சைக்காரர் வேஷம்… மீனாவிடம் வசமாக சிக்கிட்டாரே!… விஜயா என்ன செய்வாங்களோ?

Published on: April 15, 2024
---Advertisement---

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒரு சாமியாரை பார்க்க செல்கிறார். அவர் நம்மால் முடியலைனா மேல இருக்கவனை தான் நம்பணும் என்கிறார். அதற்கு மனோஜ் மேல ஒரு ப்ளோர் இருக்கா ப்ரோ எனக் கலாய்க்கிறார்.

உன்ன யாராலையும் காப்பாத்த முடியாது. நீ இங்கையே இருந்து கஷ்டப்படு என்கிறார். இதனால் மனோஜ் அவரை சமாதானம் செய்கிறார். வாயில் கை வைத்து, குனிஞ்சு வா என அழைத்து செல்கிறார். சாமியாரை பார்க்க உட்காருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

அவரிடம் மனோஜ், எத்தனை நாளா இந்த பீல்டில் இருக்கீங்க? யாருக்கெல்லாம் நல்லது செஞ்சிருக்கீங்க என கேள்வி கேட்டு குடைந்து கொண்டு இருக்கிறார். இதற்கு அந்த சாமியார், உனக்கு பிரச்சனையே உன் வாய் தான். மூட வேண்டிய நேரத்துல மூடினால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். 

மனோஜிடம் உனக்கு வெளிநாட்டில் வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு பணம் வேணும்னா, போய் பிச்சை எடு என்கிறார். நான் சொல்ற கோவிலில் காலை முதல் மாலை வரை ஆறு மணி வரைக்கும் பச்சை தண்ணி கூட படாம பிச்சை எடுக்கணும். அந்த பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு வா என்கிறார்.

இதையும் படிங்க: 6 முறை கமலுடன் மோதிய விஜய் படங்கள்… ஜெயித்தது உலகநாயகனா?.. தளபதியா?.. வாங்க பார்க்கலாம்..

அடுத்ததாக மனோஜுன் நண்பர் அந்த கோயிலுக்கு அழைத்து சென்று அவரை பிச்சைக்காரராக மாற்றி விடுகிறார். மனோஜ் கூட்டத்தில் சென்று பிச்சையெடுக்க அமர அவர்கள் புதுசா நீ ஏன் இங்க வந்த என்கின்றனர். அவர் வேண்டுதல் இன்னைக்கு மட்டும் தான் எனக் கூறிவிடுகிறார். பின்னர் சாப்பிட எதுவும் கிடைக்குமா எனக் கேட்க அங்கிருந்த பிச்சைக்காரர் போனில் ஆர்டர் செய்து 100 ரூபாய் டிப்ஸ் கொடுத்து மனோஜை சாப்பிட அழைத்து செல்கிறார்.

மனோஜ் சாப்பிட உட்கார அவர் நண்பர் கால் செய்து பச்சைத்தண்ணி பல்லில் படக்கூடாது என்கிறார். இதனால் சாப்பிடாமல் வந்து அமர்ந்து விடுகிறார். மனோஜ் பிச்சை எடுக்கும் கோவிலுக்கு மீனா சாமி கும்பிட வருகிறார். அவரை பார்த்து மனோஜ் முகத்தினை மூடிக்கொள்ள ஆனால் மீனா அவரை கண்டுப்பிடித்து விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.