சூர்யா மீது செம கடுப்பில் சிறுத்தை சிவா?.. கங்குவாவுக்கு அதைக்கூட பண்ண மாட்றாரே என்கிற வருத்தம்!

பல முன்னணி இயக்குனர்களை நடிகர் சூர்யா ஒரே நேரத்தில் பகைத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். வெற்றிமாறன், சுதா கொங்கரா, பாலா, ஹரி வரிசையில் தற்போது சூர்யா மீது சிறுத்தை சிவாவும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.

பெரும் உழைப்பை கொட்டி சூர்யாவுக்கு கங்குவா என்கிற பிரம்மாண்ட படத்தை சிறுத்தை சிவா எடுத்துக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்துக்கான பில்டப்பை கூட சூர்யா செய்யாமல் அடுத்த படத்தில் நடிகர் கிளம்பிவிட்டார் என்கீற வருத்தம் தற்போது சிறுத்தை சிவாவுக்கு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ஜென்டில் மேன் டூ இந்தியன் 2… சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்திய ஷங்கர்…!

கங்குவா திரைப்படம் தீபாவளிக்கு வரும் என்பதையாவது அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களை இப்போதிலிருந்து தயார்படுத்தலாமே என்கிற எண்ணம் தான் தற்போது சிறுத்தை சிவாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

கங்குவா படத்தை ரிலீஸ் செய்யாமல் சிறுத்தை சிவாவால் அடுத்த படத்துக்கு செல்ல முடியாத சூழல் உருவாகி இருப்பதுதான் இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்றும் பேசப்படுகிறது. கங்குவா படத்தை சிறுத்தை சிவா மலை போல நம்பி இருப்பதால் புஷ்பா 2 , கல்கி படங்களுக்கு கொடுக்கப்படும் பில்டப்களை போல இந்த படத்துக்கும் கொடுத்தால் தான் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

இதையும் படிங்க: கமல் படத்துக்கு முட்டுக்கட்டையா? என்ன இது புதுத்தகவலா இருக்கே..?!

ஆனால், எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காமல் அப்படியே அமைதியாக விட்டு விட்டு அடுத்த படத்துக்கு சென்று விட்டால் கங்குவா படமும் கல்லா கட்டுவது கஷ்டம் தான் என்றே படக்குழுவினர் பலர் பேச ஆரம்பித்து விட்டதாக சிறுத்தை சிவா சூர்யாவிடம் பேசியுள்ளாராம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடிக்க சென்ற நிலையில், சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று இந்தி ரீமேக் படம், கங்குவா படம் என பல படங்கள் ரிலீஸை நோக்கி நகராமல் இருப்பதாக கூறுகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எந்தவொரு முயற்சியும் செய்யாமல் இருப்பதால் தங்கலான் படமும் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நேத்து வரைக்கும் கோயில்ல உருண்ட நாட்டாமை! இன்னிக்கு எங்க இருக்காரு பாருங்க.. இதுவும் முக்கியம்ல

Related Articles
Next Story
Share it