Connect with us
sivaji

Cinema History

சாப்பாடு போட்ட எம்.ஜி.ஆர்!.. வாய்ப்பு வாங்கி கொடுத்த சிவாஜி!. ரெண்டு பேருக்கும் நடுவுல இவ்வளவு இருக்கா?!…

தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இரு பெரும் துருவங்களாக சினிமாவை ஆட்சி செய்த இவர்கள் ஒரு பெரிய ஆளுமைகளாகவே வலம் வந்தார்கள். தொழில் முனை போட்டிகள் இருந்தாலும் இவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் இல்லை பொறாமையும் இருந்தது இல்லை. நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தார் சிவாஜி. வீரத்தை பறைசாற்றும் ஒரு முடி சூடா மன்னனாக வலம் வந்தார் எம் ஜி ஆர்.

sivaji1

sivaji1

இந்த நிலையில் சிவாஜியை பற்றி 17 வருடங்களாக ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் மருது மோகன் என்பவர் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த அந்த உறவு, அவர்களுக்குள் முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்பதை பற்றி ஒரு பேட்டியின் மூலம் விவரித்து இருக்கிறார்.

சிவாஜி முதலில் மங்களகர சபா என்ற சபாவின் மூலம் நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது நாடகங்கள் அந்த அளவுக்கு சிறப்பாக போகவில்லையாம் .அதனால் அந்த நாடகத்தில் இருந்த கலைஞர்கள் அனைவரும் பட்டினியால் வாடிக்கிடந்தனராம்.

இந்த விஷயம் தெரிந்த என் எஸ் கிருஷ்ணன் அந்த சபாவை விலைக்கு வாங்கி அங்கு நடித்துக் கொண்டிருந்த நடிகற்களின் பசியை போக்கினாராம். மேலும் அந்த சபாவை முதலில் இருந்த இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு மாற்றினாராம். அந்த இடத்திற்கு எதிரே தான் எம்ஜிஆர் குடியிருந்தாராம் .ஏற்கனவே என்.எஸ். கிருஷ்ணனும் எம்ஜிஆரும் நல்ல பழக்கம் என்பதால் என்.எஸ் கிருஷ்ணனின் மூலம் எம்ஜிஆருக்கு சிவாஜி அறிமுகம் ஆனாராம்.

sivaji2

sivaji2

அந்த சமயத்தில் எம்ஜிஆர் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து ஐம்பது ரூபாய், அறுபது ரூபாய் என கொண்டு வருவாராம் .அதை வைத்து சிவாஜியை தனியாக அழைத்து” நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டாய் ,வா ஏதாவது வாங்கித் தருகிறேன்,” என அழைத்துக் கொண்டு போவாராம் .சிவாஜியும் எம்ஜிஆர் வருகைக்காக காத்துக் கொண்டு இருப்பாராம்.

இப்படி எம்ஜி ஆரும் சிவாஜியும் ஒரு நட்பிற்கு அடையாளமாகவே திகழ்ந்திருக்கின்றனர். 50 காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு பட வாய்ப்புகள் அந்த அளவுக்கு இல்லையாம். ஆனால் பராசக்தி நடித்து முடித்ததும் சிவாஜிக்கு 54களில் கிட்டத்தட்ட ஏகப்பட்ட படங்கள் புக் ஆயினவாம். எம்ஜிஆருக்கு பட வாய்ப்புகள் இல்லாததை அறிந்து சிவாஜி மிகவும் வருந்தினாராம்.

sivaji3

maruthumohan

அந்த சமயம் தான் சிவாஜியைத் தேடி மலைக்கள்ளன் என்ற படத்தின் வாய்ப்பு வந்ததாம் .ஆனால் சிவாஜி இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கருதி அந்த இயக்குனரிடம் எம்ஜிஆரின் பெயரை சிபாரிசு செய்தாராம். எம்ஜிஆரும் சிவாஜியிடம் “இந்த படத்தில் நீ நடிக்க வேண்டியது தானே” என கேட்டாராம் .ஆனால் சிவாஜி “நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும்” என கூறி மலைக்கள்ளன் படத்தின் வாய்ப்பை எம்.ஜி.ஆருக்காக கொடுத்தாராம். இந்தத் தகவலை கூறிய ஆராய்ச்சியாளர் மருதுமோகன் எம்ஜிஆரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர் சிவாஜி என்றும் கூறினார்.

இதையும் படிங்க : விசுவோடு இருந்ததும் ஒரு விதத்துல தப்பு!.. ராஜ்கிரணால் பல மணி நேரம் காக்கவைக்கப்பட்ட கஸ்தூரி ராஜா..

google news
Continue Reading

More in Cinema History

To Top