Connect with us
visu

Cinema News

விசுவோடு இருந்தது தப்பு!.. கஸ்தூரி ராஜாவை பல மணி நேரம் காக்க வைத்த ராஜ்கிரண்…

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக ,தயாரிப்பாளராக ,கதாசிரியராக, வசனகர்த்தாவாக, ஒரு நல்ல நடிகராக வலம் வந்தவர் விசு. இவர் பல மேடை நாடகங்கள் ,தொலைக்காட்சி தொடர்கள் என பன்முக தொழில்களில் ஈடுபட்டு தன்னை பலப்படுத்திக் கொண்டவர்.

visu1

visu1

விசுவின் சினிமா வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் .இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்துப் போக அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. 1986 ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை இந்தப் படம் பெற்றது. இவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து அதன்பின் ஒரு நல்ல இயக்குனராக மாறினார் . இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூகத்தையும் குடும்பத்தையும் மையப்படுத்தி அமையும் வகையில் இருக்கும்.

அதே வகையில் விசுவுக்கு முன் கோபமும் அதிகம். தான் தான் ஒரு நல்ல இயக்குனர் என்ற ஒரு கர்வமும் அதிகம் என தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் ஒரு நல்ல இயக்குனருக்கு அந்த ஒரு கர்வம் இருக்க வேண்டியது அவசியம் தான் என்றும் கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார். விசுவிடமிருந்து தொழில் கற்றவர்தான் கஸ்தூரிராஜா.

visu2

visu2

விசுவை இப்பொழுது வரைக்கும் தன் குருவாகவே நினைத்து பாவித்து வருகிறார் கஸ்தூரிராஜா. இந்த நிலையில் கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தைப் பற்றிய ஒரு அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் படத்திற்கான கதையை ஒரு சீடியில் தயார் செய்து நிறைய நடிகர்களிடமும் தனக்கு தெரிந்தவர்களிடமும் சென்று வாய்ப்புகள் தேடினாராம் கஸ்தூரிராஜா.

அதன் பிறகு தனக்குத் தெரிந்த நண்பர் மூலம் ராஜ்கிரண் வீட்டிற்கு சென்று இருக்கிறார் கஸ்தூரிராஜா. ஆனால் ராஜ்கிரண் கஸ்தூரிராஜாவை பல மணி நேரம் காக்க வைத்திருக்கிறார். அதன் பிறகே ராஜ்கிரனிடம் ஆறு கதைகளை கூறினாராம் கஸ்தூரிராஜா. ஆனால் அந்த கதைகள் எதுவுமே ராஜ்கிரனுக்கு பிடிக்கவில்லையாம். உடனே கோபப்பட்ட கஸ்தூரிராஜா கடைசியாக இந்த சீடியை அவர் கையில் கொடுத்து இதைப் பார்த்த பிறகு நான் யார் என்பது உங்களுக்கு புரியும் என்று கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டாராம் கஸ்தூரிராஜா.

visu3

visu3

இதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய கஸ்தூரிராஜா விசுவோடு நான் இருந்ததில் மிகப்பெரிய மைனஸ் கோபம் என்று கூறினார். அந்த நேரத்தில் ராஜ்கிரண் மீது நான் கோபப்பட்டு அந்த மாதிரி பேசியதற்கு ஒரு காரணமும் விசு தான் என்று ஒரு பேட்டியில் கூறினார். அவரோடு பயணித்ததினாலேயே எனக்கும் கொஞ்சம் கோபமும் கர்வமும் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க : ஓடாது என பாலச்சந்தர் ஒதுக்கிய திரைப்படம்.. அதையே ஹிட் அடிக்க வைத்த உதவி இயக்குனர்!..

அதன் பிறகு மறுநாள் ராஜ்கிரண் கஸ்தூரிராஜாவை வீட்டிற்கு வரவழைத்து அவரிடம் சொன்னாராம்”ஒரு நல்ல இயக்குனரிடம் இருந்து வந்தவர் நீங்கள். அவருடைய டிசிபிலின் எல்லாமே உங்களிடமும் இருந்திருக்க வேண்டும் .ஆனால் ஒரு நடிகரை பார்க்க வர வேண்டும் என்றால் முதலில் அப்பாயின்மென்ட் வாங்கிய பிறகு வரவேண்டும் அல்லவா. அதனால் தான் உங்களை காக்க வைத்தேன்” என்று கஸ்தூரிராஜாவிடம் ராஜ்கிரன் கூறினாராம். அதன் பிறகு தான் கதை பிடித்துப் போக என் ராசாவின் மனசிலே படம் தயாராகியது என்று கஸ்தூரிராஜா கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top