Cinema History
மூன்று ரோல்களை இரவு, பகலுமாக 11 நாளில் முடித்துக் கொடுத்த ‘பலே பாண்டியா’… ஆச்சரியமா இருக்கே..!
Bale Pandiya: கணீர் குரல், பிசிராமல் பேசும் தமிழ், மாஸ் காட்டும் நடிப்பு என சிவாஜியின் நடிப்புக்கு ஈடு இணையே கிடையாது. நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று கோலிவுட்டில் அவருக்கு ஏகப்பட்ட செல்ல பெயர்களும் இருந்து வருகிறது.
நாடக துறையில் கொடி கட்டி பறந்து வந்த சிவாஜிக்கு பராசக்தி வாய்ப்பை பெருமாள் முதலியார் கொடுத்த போது பலருக்கு அதில் விருப்பமே இல்லையாம். இவர் ஒல்லியாக இருக்கிறார் என எக்கசக்கமாக குறைகளை கூறி கொண்டே இருந்து இருக்கின்றனர். ஆனால் முதலியாரோ சிவாஜி தான் நடிப்பார் என்பதில் உறுதியாக இருந்தாராம்.
இதையும் படிங்க: நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்…
ஒரு கட்டத்தில் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்த எல்லா வேப்ப மரத்தின் கீழும் அமர்ந்து அழுது இருக்கிறார். என் கண்ணீரில் தான் அந்த மரங்களே வளர்ந்தது என சில இடங்களில் சிவாஜியே கூறி இருக்கிறார். அப்படி பாடாய்பட்டு நடித்த பராசக்தி படம் 1950ல் தொடங்கி 1952ல் தான் ரிலீஸாகி இருக்கிறது.
அடுத்த 27 வருடத்திற்குள் 200 படங்களில் நடித்து விட்டார். ஒரே நாளில் மூன்று படங்களுக்கு கால்ஷூட் கொடுத்து அதை கச்சிதமாக செய்தும் முடித்து விட்டாராம். ஒருமுறை 1962ல் அமெரிக்காவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டதாம். அப்போது தான் பலே பாண்டியா படத்திற்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டுடியோவிற்கு 2ந் தேதி நுழைந்தவர். தொடர்ச்சியாக 12ந் தேதியே வெளியில் வந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நான் ஒன்னு நினைச்சி போனேன்.. விஜயகாந்த் வேற ஒன்னு பண்ணிட்டார்!.. லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்..
11 நாட்களில் மொத்த படத்தினையும் நடித்து கொடுத்து விட்டாராம். அதிலும் அந்த படத்தில் சிவாஜிக்கு மூன்று வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜிக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலே நடிகர் திலகம் இயற்கை எய்திவிட்டாராம்.