Connect with us
sivahi

Cinema History

அந்தப் படத்துல நடிச்சதுக்கு மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வேதனையில் சிவாஜி.. இதெல்லாம் நடந்திருக்கா

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு மட்டும்தான் எல்லாமே என இருந்து பல சாதனைகளை செய்த ஒரு மாபெரும் நடிகர். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை வியக்க வைத்தவர். பல சவாலான கேரக்டர்களையும் அசால்ட்டாக நடித்து பிரமிக்கவைத்தவர்.

எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்? விடுதலை போராட்ட வீரர்கள், புராணங்கள், வரலாறில் இருக்கும் துணிச்சலான கதாபாத்திரங்கள் என பல முக்கிய தலைவர்களையும் பிரபலங்களையும் தன் கண் முன் காட்டியவர் சிவாஜி கணேசன். ரோட்டில் ஒருவரை பார்த்துவிட்டால் அவரை அப்படியே தன் மனதிற்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுவாராம் சிவாஜி.

இதையும் படிங்க: முத்து விஷயத்தினை குடையும் ரோகினி!… அவரு திருப்பி உங்களை கிளறினா மாட்டிப்பீங்க… கம்முனு இரும்மா!

ஏனெனில் வருங்காலத்தில் அந்த நபரை போன்ற ஒரு கதாபாத்திரம் வந்தால் அதை நியாபகப்படுத்தி நடிப்பாராம். இதை அவரே ஒரு பழைய பேட்டியில் கூறியிருக்கிறார். என் சிறப்பான நடிப்பிற்கு இதுவும் ஓரு காரணம் என்றும் சொல்லியிருக்கிறார் சிவாஜி. பாரதியார், கப்பலோட்டிய தமிழன , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல தலைவர்களின் கெட்டப்பில் நடித்து மிகப்பெரிய புகழை பெற்றார்.

இந்த நிலையில் மணிவண்ணன் இயக்கத்தில் சிவக்குமார் நடித்த படம் ‘இனி ஒரு சுதந்திரம்’. இந்தப் படத்தில் சிவக்குமார் ஒரு சுதந்திர போராட்டதியாகியாக நடித்திருப்பார். இந்தப் படத்தை சிவாஜியிடம் போட்டுக் காண்பித்தாராம் சிவக்குமார். இதை பார்த்த சிவாஜி நானும் உன்னைப் போல ஆர்வமாக சுதந்திர போராட்ட வீரராக கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடித்திருப்பேன்.

இதையும் படிங்க: சரத்குமார் – நக்மா காதலால் பாதிக்கப்பட்டவன் நான்! தயாரிப்பாளர் பட்ட வேதனை.. இப்படிலாம் நடந்துருக்கா

வெள்ளைக்காரனை எதிர்த்து இரண்டு கப்பல்களை ஓட்டிய அந்த வ.உ.சி, கடைசியில் பெரம்பூர் பக்கம் பெட்ரோல் வண்டிகளை ஓட்டி பொழைத்துக் கொண்டிருந்தாராம்.அப்படிப்பட்ட அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு தமிழக மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? பட்டையாக என் நெற்றியிலே நாமத்தை போட்டுவிட்டார்கள்.

இப்பொழுது நீ சுதந்திர போராட்ட தியாகியாக நடிச்சிருக்க. ஜனங்க நாமக்கட்டிய கொழைச்சிக்கிட்டு இருக்காங்க. தயாராக இரு என்று சொன்னாராம். இதில் இருந்து கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடிச்சதற்கு தனக்கு உரிய சரியான அங்கீகாரம் கிடைக்காத வருத்தத்தை மறைமுகமாக சொல்லியிருக்கிறார் சிவாஜி என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: கோபிக்கு வேலை கொடுக்க ரெடியான பாக்கியா… கடுப்பில் இருக்கும் ராதிகா… இது நல்லா இருக்கே?

google news
Continue Reading

More in Cinema History

To Top