சிவாஜி எப்படி கதையை தேர்ந்தெடுப்பார் தெரியுமா?!.. ரஜினி, விஜய், அஜித் இவர்கிட்ட கத்துக்கணும்!..

Published on: May 18, 2024
sivaji
---Advertisement---

1952ம் வருடம் வெளியான பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி. 1960ம் வருடத்திற்குள் அதாவது அவர் சினிமாவில் நடிக்க துவங்கி 8 வருடத்திற்குள் சுமார் 60 படங்களில் நடித்து முடித்திருந்தார் சிவாஜி. அதாவது சராசரியாக வருடத்திற்கு 7 படங்களில் நடித்து முடித்திருந்தார்.

ஒரு படத்திற்கு 50 நாள் நடித்தார் என வைத்துகொண்டால் அவர் வீட்டுக்கு செல்ல கூட நேரம் இல்லாத அளவுக்கு நடித்திருக்கிறார். ஆனால், இப்போது இருக்கும் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறார்கள். 10 மாதம் படப்பிடிப்பு நடந்து 2 மாதம் ஓய்வெடுக்க வெளிநாடு போகிறார்கள்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நாகேஷூக்கு வந்த சிக்கல்… ஆனா எம்ஜிஆரோ அந்த விஷயத்துல கில்லாடி..!

சில நடிகர்கள் 6 மாதத்திற்கு ஒரு படம் நடிக்கிறார்கள். ஆனால், சிவாஜியோ ஆறு மாதத்தில் 4 படங்களில் நடித்தார். அவரின் நடிப்பில் 2 வாரத்திற்கு ஒரு படம் வெளியாகி கொண்டே இருக்கும். அத்தனையும் ஹிட் அடிக்கும். இப்போதெல்லாம் ஒரு பெரிய படம் வெளியானால் மற்ற நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தள்ளி போகும். தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு பயம் உண்டு.

Sivaji
Sivaji

ஆனால், அப்போதெல்லாம் ஒரே தேதியில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர், ஜெமினி கணேசன் ஆகியோரின் படங்கள் வெளியாகும். எல்லா படங்களையும் ரசிகர்கள் பார்ப்பார்கள். குறைந்தபட்சம் ஒரு திரைப்படம் 25 நாட்கள் தியேட்டரில் ஓடும். இப்போது போல ஒரு வாரத்தில் எல்லாம் தூக்கமாட்டார்கள்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

ஒருபக்கம், சிவாஜி எப்படி தனது படங்களை தேர்ந்தெடுப்பார் என்பது பற்றி அவரே தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க வேண்டும். அதில் நடிக்கக் கூடாது… இந்த கதையில் நடிக்க வேண்டும்… அதில் நடிக்கக் கூடாது என நான் எதையுமே திட்டமிட்டு நடிக்கவில்லை. என்னிடம் வந்த எல்லா கதைகளிலும் நடித்தேன்’ என சொல்லி இருக்கிறார். இதுதான் ஆச்சர்யம்.

ஏனெனில், இப்போதெல்லாம் சின்ன நடிகர்கள் கூட கதை பிடித்தால் மட்டுமே நடிக்கிறார்கள். விஜய், அஜித் எல்லாம் சொல்லவே தேவையில்லை. பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். அப்படி அவர்கள் பல கதைகளை கேட்டு நடிக்கும் எல்லா படங்களுமே ஓடுவதும் இல்லை. ஆனால், எல்லா கதைகளையும் ஒப்புக்கொண்டு சிவாஜி நடித்த படங்களில் 80 சதவீதம் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.