Connect with us

Cinema History

12 வயதில் இப்படி ஒரு வள்ளல் தன்மை…! அதுதான் சிவாஜி…

ஒரு நடிகரைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அந்தப் பெருமையை நடிகர் திலகம் சிவாஜிக்கு பெற்றுத் தந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மருது மோகன்.

இவர் சிவாஜி குறித்த ஆய்வுக்கட்டுரையை தனது நமது பெருமை வாய்ந்த சிவாஜிகணேசன் ஐயா என்ற நூலில் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் இவ்வாறு பேசினார்.

Maruthu Mohan

சிவாஜியின் தந்தை மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர். பிரிட்டிஷ்காரர்கள் சென்ற ரெயிலுக்கு வெடிகுண்டு வைக்க முயற்சி செய்து சிறைசென்றது அக்.1, 1928.

அன்று தான் பிறந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதனால் தான் நடிகர் திலகம் தேசப்பற்றுள்ள பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 7 வயதில் சிவாஜி நடிக்கணும்னு ஆசைப்பட்டு போனார்.

நாடக உலகில் இணைந்து மதுரை டி.பாலகான சபாவில் அனாதை என சொல்லி சேர்ந்தார். அங்கும் காகா ராதாகிருஷ்ணன் அவரைப் பார்த்துவிடுகிறார். நான் அனாதைன்னு சொல்லி சேர்ந்துருக்கேன்டா…யார்டயும் சொல்லிடாதேன்னு சொல்கிறார் சிவாஜி.

VPKP

10 நாள் வகுப்புகளில் பயிற்சி செய்ததும் 11வது நாளில் மேடை ஏறுகிறார் சிவாஜி கணேசன். கம்பீரமாக நடித்தார். முதலில் போட்டது பெண் வேடம் கன்னி மாடத்தி. 8வது வயதிலேயே ஒரே நாடகத்தில் 4 வேடங்கள் போட்டார்.

அங்குள்ள 250 நடிகர்களின் வசனத்தையும் இவர் மனப்பாடமாக செய்து வைத்திருந்தார். அவர்களில் யாராவது லீவ் போட்டால் கணேசன் அவரது வேடம் ஏற்று வசனம் பேசி நடித்து விடுவார். அதனால் இவருக்கு மட்டும் அங்கு லீவே கிடையாது.

250 நடிகர்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நடிப்பதற்கு என்றே அவதாரம் எடுக்கும் ஒருவரால் தான் இவ்வளவு திறமையுடன் திகழ முடியும் என்றே சொல்லலாம்.

Manohara

அவர் நாடகம் நடித்துக் கொண்டு இருக்கும்போதே இரு சகோதர்கள் இறந்து போகின்றனர். அவர் விடுமுறை கேட்கிறார். தரவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பின் வீட்டிற்கு வருகிறார். வீட்டு வாசலிலே அவரைக் காண எம்ஆர்.ராதா வருகிறார்.

அவரும் தனது நாடகசபாவில் சிவாஜியை சேர்க்கவே வந்து கேட்கிறார். அப்போது அவருக்கு வயது 24. சிவாஜியின் வயது 12. எம்.ஆர்.ராதாவின் நாடகக்குழு சரஸ்வதி கான சபா இரண்டாகப் பிரிகிறது.

கிருஷ்ண பிள்ளையுடன் சேர்ந்து கேரளாவில் பல நாடகங்களில் சிவாஜி நடிக்கிறார். அப்போது மனோகராவில் பெண்குரலில் பேசி நடித்தும், மறுநாள் மனோகரனாகவும் நடிக்கிறார். அப்போது மகாராஜா அவருக்குப் பெரிய வெள்ளித்தட்டைப் பரிசாகக் கொடுக்கிறார். அதைத் தலைக்குப் பக்கத்தில் வைத்து படுத்திருக்கிறார்.

அதுக்கு அப்புறமா நாடகம் சரியா போகல. இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கை தோண்டி சாப்பிட்டு அந்த நாடகக்குழுவுpனர் பசியாறுகிறார்கள். அப்போது வாத்தியாரை சிவாஜி அழைத்து இந்த வெள்ளித்தட்டை வைத்துக் கொண்டு குழுவினரின் பசியாற்றுங்கள் என்றார் அதுதான் சிவாஜி. 12 வயதிலேயே இப்படி ஒரு வள்ளல் தன்மை..!

google news
Continue Reading

More in Cinema History

To Top