Connect with us

Cinema History

நடிகர் திலகம் நடித்தும் எடுபடாமல் போன படங்கள்

தமிழ்சினிமாவின் சிம்மசொப்பனமாக விளங்கியவர் செவாலியே சிவாஜிகணேசன். இவருக்கும் பல படங்கள் ப்ளாப் ஆகி உள்ளது. ஆனால் அவை ரசிக்கும்படியாக இருந்தது. சிவாஜியின் நடிப்பு எல்லாப் படங்களிலுமே பிரமாதமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவரது நடிப்பு நம்மை ஈர்க்க காரணம் அவர் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது தான்.

இதனால் தான் அவரது நடிப்பு அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்கிறது. ஒரு சில படங்களில் கதையின் போக்கு சரியாக இல்லாத பட்சத்தில் அவர் என்ன தான் நடித்தாலும் படம் ப்ளாப் ஆகி விடுகிறது. அப்படிப்பட்ட படங்களில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

மர்மவீரன்

Sivaji and Vijayanthimala in Marmaveeran

1956ல் வெளியான இப்படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். எஸ்.வேதா இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், ஸ்ரீராம், வைஜெயந்திமாலா, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, பி.எஸ்.வீரப்பா, ஜெமினிகணேசன், ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி, எஸ்.வி.ரங்கராவ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்காக ஏராளமாக செலவு செய்து எடுத்த படம். இருந்தாலும் படம் 1 மாதம் கூட ஓடாமல் ப்ளாப் ஆனது.

ஜஸ்டிஸ் கோபிநாத்

Sivaji and K.R Vijaya in Justice gopinath i

1978ல் வெளியான இப்படத்தை யோகநாத் இயக்கி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள இப்படத்தில் சிவாஜிகணேசன் உடன் ரஜினிகாந்த்தும் நடித்துள்ளார். கே.ஆர்.விஜயா, சுமித்ரா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் அதிகம் பேசப்படவில்லை. இந்தப்படத்தில் அட என்னங்க இது, நானா சொன்னேன் தீர்ப்பு, நமது காதல், அடியே நீ ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

எழுதாத சட்டங்கள்

1984ல் வெளியான இந்தப்படத்தை கே.சங்கர் இயக்கினார். சிவாஜிகணேசன், ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், சரத்பாபு, நளினி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெறவில்லை. சிவாஜியின் படங்களில் அதிகம் பேசாத படமாகி விட்டது.

 

ஒன்ஸ்மோர்

1997ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். விஜய் உடன் சிவாஜிகணேசன் இணைந்து நடித்துள்ளார். சரோஜாதேவி, சிம்ரன், மணிவண்ணன், அஞ்சு அரவிந்த், சார்லி, எஸ்.எஸ்.சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தேவா இசை அமைத்துள்ளார். சின்ன சின்ன காதல், மலர்களே, ஊட்டி மலை பியூட்டி, ஊர்மிளா ஊர்மிளா, பூவே பூவே ஆகிய பாடல்கள் உள்ளன.

 

மன்னவரு சின்னவரு

Mannavaru Chinnavaru

1999ல் வெளியானது. பி.என்.ராமசந்திர ராவ் இயக்கிய இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சிவாஜிகணேசன், அர்ஜூன், சௌந்தர்யா, மகேஷ்வரி, விசு, கே.ஆர்.விஜயா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கீத பிரியன் இசை அமைத்துள்ளார். இது நடிகர் அர்ஜூனின் 100வது படம். இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ப்ளாப் ஆனது.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top