Connect with us
sivaji

Cinema News

ஐயா இன்னிக்கு உங்க கேரக்டர் இல்ல! மேக்கப்புடன் வந்த சிவாஜியிடம் இப்படி சொல்லலாமா? ரணகளமாக சூட்டிங் ஸ்பாட்

Sivaji Ganesan:  நடிகர் திலகம் சிவாஜி எப்பேற்பட்ட நடிகர் என்பதையும் தாண்டி சினிமா மீது அவருக்கு இருந்த பக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். சரியான நேரத்தில் செட்டில் முதல் ஆளாக வருவது, அன்று என்ன காட்சியோ வீட்டிலிருந்தே அதற்கேற்றவாறு தன்னை தயார்படுத்திக்  கொண்டு வருவது என சினிமாவில் முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1973 ஆம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளியான திரைப்படம் கௌரவம். இந்தப் படத்தில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். பாரீஸ்டர் ரஜினிகாந்த் மற்றும் வழக்கறிஞர் கண்ணன் என்ற கதாபாத்திரங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அவருடன் சேர்ந்து உஷா நந்தினி, பண்டரிபாய், நாகேஷ் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இதையும் படிங்க: லிவிங்ஸ்டனை கண்ணீர் விட வச்ச இளையராஜா…. ஆனால் அந்த பாட்டையே ஹிட்டாக வச்ச பிரபல இசையமைப்பாளர்…

இந்தப் படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரின் காட்சியை நாளை எடுப்பதாக முந்தைய நாளே சிவாஜியிடம் வியட்நாம் வீடு சுந்தரம் கூறியிருக்கிறார். அதனால் அன்று அதே கெட்டபில் சிவாஜி படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் வந்துவிட்டாராம்.

ஆனால் அன்று பாரீஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டர் பற்றிய காட்சிகளை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை சிவாஜியிடம் எப்படி தெரிவிப்பது என அனைவரும் பயந்தார்களாம்.உடனே சுந்தரம் சிவாஜியிடம் ‘சார் இன்று இந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சியை எடுக்க முடியாது. வேண்டுமென்றால் கண்ணன் கேரக்டரில் வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: தொடையழகை காட்டி தொக்கா கவுத்துப்புட்ட தர்ஷா குப்தா!.. கையை தூக்கி சும்மா கிறங்கடிக்கிறாரே!..

அதற்கு சிவாஜி ‘ஏண்ட்டா இது என்ன சட்டையா? நினைத்த நேரம் மாற்றிக் கொள்வதற்கு. இங்க மட்டும் இல்லடா வீட்டிலேயே நான் ரஜினிகாந்த் தான். நாளைக்கு என்ன கேரக்டர்னு சொல்லு. இன்னிக்கு பேக்கப் என்று சொல்லு’ என அன்று நடக்க இருந்த படப்பிடிப்பை பேக்கப் செய்ய வைத்திருக்கிறார் சிவாஜி.இதை ஒரு பேட்டியில் வியட்நாம் வீடு சுந்தரம் சொன்னதாக எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top