Categories: Cinema News latest news

ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!

Sivaji Ganesan: தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனை படங்களில் நடித்து இருப்பார். அவருக்கு சொற்பங்களில் தொடங்கிய சம்பளம் ஒரே படத்துக்கு மட்டும் தான் தன்னுடைய சினிமா கேரியரிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ரஜினிகாந்துக்கு தந்தையாக சில காட்சிகளில் அவர் நடித்த படையப்பா படத்திற்காக தான் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சம்பளமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. சிவாஜி கணேசன் 1980களுக்குப் பிறகு தான் நடித்த எந்த படத்திற்கும் சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை. தயாரிப்பாளர்களிடம் என்ன தோன்றுகிறதோ அதை கொடு என்று கூறி விடுவாராம்.

இதையும் படிங்க: ஜெய்லர் வசூலை தொடக்கூட முடியாது… லியோ படக்குழுவை கதறவிடும் புது பிரச்னைகள்! ஐயகோ!

அந்த வகையில் தான் விஜயுடன் இணைந்து நடித்த ஒன்ஸ்மோர் படத்திற்காக எஸ்.ஏ சந்திரசேகரிடம் ரூ.100 மட்டுமே அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார். எஸ்.ஏ சந்திரசேகர் 10 லட்சம் சம்பளமாக கொடுத்தாராம்.

இதை தொடர்ந்து, 1992ம் ஆண்டு கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படத்திற்காக 20 லட்சத்தினை சம்பளமாக வாங்கினாராம். இந்த படத்தினை போல படையப்பாவிற்கு சில லட்சங்களே சம்பளமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: கீர்த்திக்கு கல்யாணமாம்… ஆனா அந்த ஆளு இல்ல…! ட்விஸ்ட் வைத்த சூப்பர் நியூஸ்!

தயாரிப்பாளர் செக்கை சிவாஜியிடம் கொடுத்த போது அதை 10 லட்சம் என நினைத்து வாங்கி வந்து இருக்கிறார். பின்னர் தன்னுடைய மகனிடம் கொடுத்த போது தான் அது ஒரு கோடி என்பதே தெரிந்து இருக்கிறது. ஒருவேளை தயாரிப்பாளர் தெரியாமல் போட்டுவிட்டாரோ என நினைத்தாராம்.

அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு அழைத்து பேசி இருக்கிறார். அது தெரியாமல் செய்தது இல்லை. தெரிந்தே உங்களுக்கு சம்பளமாக ஒரு கோடி கொடுக்கப்பட்டது. ரஜினிகாந்த் தான் ஒரு கோடி சம்பளமாக கொடுக்க சொன்னதாக தயாரிப்பாளர் கூறினாராம். அதையடுத்து ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார் சிவாஜி.

Published by
Akhilan