Connect with us
sivaji

Cinema History

சிவாஜியின் படங்களாலேயே பிளாப் ஆன சிவாஜி படம்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..

எம்.ஜி.ஆரை போலவே ஏழு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியவர் சிவாஜி. நாடகங்களில் பல வேஷங்களில் நடித்துள்ளார். நாடகத்தில் இவர் முதலில் போட்டது சீதை வேஷம்தான். அதன்பின் பல வேடங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் இவர் சினிமாவுக்கு வந்தார். பராசக்தி திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கிய சிவாஜி அதன்பின் பல படங்களில் நடித்து நடிகர் திலகமாக மாறினார். பல வேடங்களில் நடித்து நடிப்பிற்கே இலக்கணமாக மாறியவர்.

sivaji2

sivaji2

சில சமயம் சில நடிகர்களின் படங்களில் தொடர்ந்து வெளியாகும். அதாவது அந்த நடிகரின் படம் வெளியாகி சில நாட்களிலேயே அவரின் அடுத்த படம் வெளியாகும். ஒருசமயம் இரண்டு படங்களும் ஓடிவிடும். சில சமயம் அதில் ஒரு படம் மட்டும் தப்பிக்கும். மைக் மோகனின் பல படங்களுக்கு அவரின் படங்களே போட்டியாக வந்ததுண்டு. அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேரியரிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளது.

punar genma

சிவாஜி நடிப்பில் 1961ம் வருடம் வெளிவந்த திரைப்படம் புனர் ஜென்மம். இப்படத்தை ஆர்.எஸ்.மணி என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. இதற்கு காரணமாக இருந்ததே சிவாஜியின் மற்ற இரண்டு படங்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

pava mannippu

புனர் ஜென்மம் திரைப்படம் 1961ம் வருடம் ஏப்ரல் 21ம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு அதாவது அதே வருடம் மார்ச் மாதம் 16ம் தேதி சிவாஜியின் நடிப்பில் உருவான ‘பாவ மன்னிப்பு’ படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

pasamalar

அதேபோல், இந்த படம் வெளியாகி 37வது நாள் புனர் ஜென்மம் வெளியானது. அதேபோல், புனர் ஜென்மம் வெளியாகி 31 நாட்களில் அதாவது மே 27ம் தேதி சிவாஜி – சாவித்ரி நடித்து எவர்க்ரீன் நடித்த பாசமலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, பாவ மன்னிப்பு மற்றும் பாச மலர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நடுவில் சிக்கி புனர் ஜெனம் படம் தோல்வி அடைந்ததுவிட்டது.

google news
Continue Reading

More in Cinema History

To Top