சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் பண்ணுறாரா?… அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-05-04 10:50:39  )
Sivaji Ganesan
X

Sivaji Ganesan

சிவாஜி கணேசன் நடிப்பாற்றலில் மிகப்பெரிய ஜாம்பவனாக வலம் வந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே பல்கலைக்கழகம் என்று போற்றப்படுபவர். இவ்வாறு நடிப்பு என்ற இலக்கணத்திற்கே உதாரணமாக திகழ்ந்தார் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசனின் நடிப்பை பலர் புகழ்ந்தாலும் அவரது நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சிப்பவர்களும் உண்டு. இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பது போல் ஒரு பதிலை கூறியிருக்கிறார் சிவாஜி கணேசன். அச்சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

ஒரு முறை பிபிசி-ஐ சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் சிவாஜி கணேசனை பேட்டி எடுக்க வந்தாராம். அப்போது அந்த பத்திரிக்கையாளர், "நீங்கள் ஏன் ஓவர் ஆக்டிங் செய்கிறீர்கள்?" என கேட்க, அதற்கு சிவாஜி கணேசன் அவரை ஒரு நாடக சபாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே மேடையில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்த இருக்கையில் அந்த பத்திரிக்கையாளரை அமரவைத்து அவருக்கு அருகில் அவரும் அம்ர்ந்துகொண்டார். மேடையில் நாடகம் தொடங்கியது.

நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தவர்களின் நடிப்பும் பேச்சும் அந்த பத்திரிக்கையாளருக்கு சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் பேசும் வசனங்கள் அவரது காதில் சரியாக விழவில்லை. அப்போது தனது அருகில் அமர்ந்திருந்த சிவாஜி கணேசனை பார்த்து, "இவர்கள் பேசுவது ஒன்றுமே என் காதில் சரியாக விழவில்லை. அவர்கள் நடிப்பதும் புரியவில்லை" என கூறியிருக்கிறார். அதற்கு சிவாஜி கணேசன், "இப்போது புரிகிறதா? நான் நடிப்பது ஏன் உங்களுக்கு ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது என்று. நாடகத்தில் நடிக்கும்போது எந்த உணர்ச்சியை வெளிபடுத்துகிறோமோ அதனை கொஞ்சம் மிகையாக வெளிப்படுத்தவேண்டும். வசனம் பேசும்போது கத்தி பேசவேண்டும். அப்போதுதான் அரங்கத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் கேட்கும். நாங்கள் நடிப்பதும் புரியும். இவ்வாறு நான் நாடகத்தில் நடித்தபோது இருந்த பழக்கம்தான் எனது சினிமா வரை தொடர்கிறது" என்று பதிலளித்தாராம்.

இதையும் படிங்க: படம் எடுக்கணும்னு நினைச்சதுக்கு நல்லா பண்ணிட்டாங்க!.. வழக்குகளில் சிக்கிய விஜய் ஆண்டனி…

Next Story