Sivaji Ganesan: தன்னுடைய இளவயதில் தான் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் பல வருடங்கள் தனக்கான ஒரு இடத்தினை தக்க வைத்தார். ஆனால் அவருக்கு முதுமை நெருங்க நெருங்க அவரால் சினிமாவில் ஒரு இடத்தினை பிடித்து வைத்து கொள்ளவில்லை.
வயது ஆகி அவர் ஹீரோவாக நடித்த படம் முதல் மரியாதை தான். இதில் ராதா, வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். பாரதிராஜா இந்த படத்தினை இயக்கி தயாரித்து இருந்தார். இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை இளையராஜா செய்தார். அனைத்துப் பாடல் வரிகளையும் வைரமுத்து எழுதி இருந்தார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!
ஆனால் இந்த படத்தினை பார்த்த வைரமுத்து, இளையராஜாவுக்கு முதலில் இந்த கதை பிடிக்கவே இல்லையாம். இப்படி ஒரு கதையை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்றே கூறினாராம். இருந்தாலும் பாரதிராஜா தான் நம்பிக்கையாக இருந்து இருக்கிறார்.
தொடர்ந்து படத்தில் சிவாஜியை நடிக்க வைக்கவே பெரும்பாடு பட்டு தான் ஓகே வாங்கினாராம். அந்த படம் ஓடாமல் போயிருந்தால் தான் ஒன்னுமே இல்லாமல் போயிருப்பேன் என்று கூட பாரதிராஜா சமீபத்தில் தெரிவித்தார். தொடர்ச்சியாக முதல் மரியாதை டிஜிட்டல் செய்யப்பட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு 1986ம் ஆண்டுக்காக சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு பாரதிராஜா முதலில் தேடிய நடிகர் சிவாஜி கணேசனே இல்லையாம். அவர் மனதில் இருந்த பிரபலமே வேறாம்.
இதையும் படிங்க: தளபதி விஜயை காப்பாற்றி வரும் கவுண்டமணி!.. அவர் மட்டும் இல்லனா!.. விஜயே பகிர்ந்த சீக்ரெட்..
அப்போது சினிமாவில் வளர்ந்து வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தான் கேரக்டருக்கு சரியாக இருப்பார் என பாரதிராஜா அவரை நடிக்க வைக்க கேட்டு இருக்கிறார். ஆனால் கதை பிடித்து இருந்தால் கூட எனக்கு நடிப்பு செட்டாகாது வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டாராம் எஸ்.பி.பி.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…