சிவாஜியுடன் நடக்க இருந்த மோதல்!.. சாமர்த்தியமா பேசி எப்படி கவுத்தாருனு பாருங்க நாகேஷ்?.
தமிழ் சினிமாவில் மூவேந்தர்களாக எப்படி கோலோச்சி வந்தார்களோ அதே வகையில் நகைச்சுவையில் நாகேஷ் ஒத்த ஆளா இருந்து அனைவரையும் அசர வைத்துக் கொண்டிருந்தார். ஆரம்பகாலங்களில் பல நாடக மேடைகளில் நடிக்க வந்த நாகேஷ் முதன் முதலாக சிவாஜியுடன் இணைந்தார்.
அப்போது சிவாஜியுடன் அறிமுகம் செய்து வைக்கும் போது சிவாஜி நாகேஷைப் பார்த்து பெரிய நடிகர், நாம் புதுமுகம் எப்படி நடிக்கப் போகிறோம் என்ற எண்ணமெல்லாம் வைக்காமல் சாதாரணமாக இரு. நன்றாக நடி என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
சாதாரணமாக புதுமுக நடிகர்கள் என்றாலே அனுபவம் வாய்ந்த நடிகர்கள் சொல்லும் போது ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே முறை. ஆனால் நாகேஷ் பதிலுக்கு சிவாஜியிடம் இவன் புதுமுகம், நாம் எப்படி நடிக்க போகிறோம் என்று நீங்களும் இருந்து விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ‘மண்வாசனை’ படத்தின் ரியல் க்ளைமாக்ஸ் இதுதான்!.. பாரதிராஜாவுக்கு வந்த நெருக்கடியால் க்ளைமாக்ஸை மாற்றிய சம்பவம்..
ஆனால் சிவாஜி இதை கேட்டுக் கொண்டு சத்தம் ஏதும் போடாமல் சிரித்துக் கொண்டாராம். ஒரு காலத்தில் நாகேஷ் இல்லாத படங்களா? என்று கேட்கும் அளவிற்கு ஓடி ஓடி நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி என அனைத்து நடிகர்களின் படங்களிலும் இவர் தான் நகைச்சுவை மன்னன்.
அதனால் மற்ற படங்களுக்கு இவர் வரும் வரை நாகேஷ் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கி விடுவார்களாம். அதன் பின் நாகேஷ் கால்ஷீட் கிடைக்கும் வரை காத்திருந்து அவரின் ஷார்ட்டுகளை எடுக்க ஆரம்பிப்பார்களாம். இப்படி சிவாஜியின் ஒரு படத்திற்கு நாகேஷ் இன்னொரு படத்தில் பிஸியாக இருக்க அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டனராம்.
இதையும் படிங்க : இது சிவக்குமார் ஹீரோவா நடிச்ச படம்… ஆனால் எங்க தேடுனாலும் அவர் இருக்கமாட்டாரு… ஏன் தெரியுமா??
அதன் பின் நாகேஷ் வரும் வரை சிவாஜி காத்திருந்தாராம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நாகேஷுக்கு ஒரே திகில் திகில் உணர்வு தான். ஏனெனில் அந்த அளவுக்கு செட் அமைதியாக இருக்க சிவாஜி நாகேஷை சத்தம் போட்டிருக்கிறார். அவரின் சத்தத்தால் செட்டில் இருந்த அனைவருக்கும் இன்று ஒரு பெரிய பூகம்பமே வெடிக்க போகிறது என்று நினைத்திருந்தனராம்.
ஆனால் நாகேஷ் சாமர்த்தியமாக யோசித்து சிவாஜியிடம் உங்கள் மீசையில் ஒரு பக்கம் கீழெறிங்கியிருக்கிறது. மேக்கப் மேனிடம் சொல்லி சரி செய்ய சொல்லுங்கள் என்று கூற சிவாஜியும் கண்ணாடியில் பார்த்து மேக்கப் மேனை அழைத்து சரி செய்ய சொல்லி இப்ப சரியாக இருக்கிறதா என்று நாகேஷிடம் கேட்டிருக்கிறார்.
இப்படி பேச்சுவாக்கிலே சிவாஜியை ஷார்ட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டாராம் நாகேஷ். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.