சிவாஜியே ”ப்ளாக் கோப்ரா” என அழைத்த அந்த நடிகர்..? வில்லனுக்கே பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்…
Black Cobra: தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு இருக்கும் அந்த ரசிகர் கூட்டம் கண்டிப்பாக ஹீரோக்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒரு ஹீரோ எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால் வில்லனை அவர்கள் வெறுக்கும் அளவுக்கு நடித்தால் மட்டுமே கூட்டத்தினை தன் பக்கம் ஈர்க்க முடியும். அப்படி ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் ஆர்.பி.விஸ்வம். இவரை இன்று இருக்கும் நிறைய ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அவர் பெயர் தான் பரிச்சியம் ஆகி இருக்காது. இவர் வில்லனாக […]
Black Cobra: தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு இருக்கும் அந்த ரசிகர் கூட்டம் கண்டிப்பாக ஹீரோக்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒரு ஹீரோ எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால் வில்லனை அவர்கள் வெறுக்கும் அளவுக்கு நடித்தால் மட்டுமே கூட்டத்தினை தன் பக்கம் ஈர்க்க முடியும்.
அப்படி ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் ஆர்.பி.விஸ்வம். இவரை இன்று இருக்கும் நிறைய ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அவர் பெயர் தான் பரிச்சியம் ஆகி இருக்காது. இவர் வில்லனாக அறிமுகமான படம் அறுவடை நாள். அந்த படத்திலே இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்துக்கு வசனகர்த்தாவும் இவர் தானாம்.
இதையும் வாசிங்க:அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!.
இதுவரை நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த ரசிகர்களின் ஸ்பெஷல் கவனிப்பு. இவருக்கு படத்தில் கிடைத்தது. சின்ன ஜமீன் படத்தின் முதல் காட்சியில் குடம் குடமாக பால் அபிஷேகம் செய்வார்கள். கதாநாயகனாக நடித்த கார்த்திக்கிற்கு கூட அவருக்கு கூட இப்படி ஒரு காட்சி இல்லை. பெரும்பாலும் வில்லனாக மட்டுமே நடித்து இருக்கிறார்.
ஆனால் ஒரே ஒரு படத்தில் குணசித்திர வேடம் ஏற்றார். அந்த படம் தான் உருவம். அதில் குடும்பத்தை காப்பாற்றும் சாமியாராக நடித்து இருப்பார். இவரின் எல்லா படத்திலும் ஹீரோவுக்கு நிகரான ஓபன் காட்சி இவருக்கும் இருக்கும். இத்தனை சிறப்பை நடிப்பில் கொட்டிய விஸ்வத்துக்கு தொடர்ச்சியாக சினிமாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஞானபழம் படத்தை பாக்கியராஜை வைத்து இயக்குனார். இவரை தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ப்ளாக் கோப்ரா என செல்லமாக அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க:விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…