நடிகைக்கு மட்டும் கிடைத்த புகழ்!.. தூக்கம் இல்லாமல் தவித்த சிவாஜி.. யாருக்கு போன் பண்ணார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் எவ்ளோதான் போட்டிகள் பொறாமைகள் இருந்தாலும் அதை யாரும் வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். காரணம் அதில் அவர்களின் கௌரவப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதால் தான். மேலும் அந்த போட்டிகளை வெளிப்படையாக காட்டவும் முடியாது. அவரவர் திறமைகளுக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் தான் அது.
இந்த ஒரு விஷயம சினிமாவில் காலங்காலமாக நடந்து வருகின்ற ஒன்று. எவ்ளோதான் உயரத்தை அடைந்தாலும் தன் திறமைக்கு ஒரு இழுக்கு ஏற்படுமானால் எப்பேற்பட்ட உயரந்த மனிதனாக இருந்தாலும் சற்று கீழிறங்கி கோபத்தை வெளிக் காட்டத்தான் வேண்டி வரும்.
அந்த வகையில் சிவாஜியின் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சிவாஜியும் பத்மினியும் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள்.திரையில் இவர்களின் ஜோடியை பாராட்டதவர்களே இல்லை. அந்த அளவுக்கு இருவரின் கெமிஸ்டிரியும் ஒத்துப் போயிருக்கும்.
அப்படி அமைந்த ஒரு படம் தான் ‘பேசும் தெய்வம்’. இந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நாள் தோறும் பத்மினியின் நடிப்பை இயக்குனர் கே.எஸ்.ஜி பாராட்டிக் கொண்டே இருந்தாராம். இதை தினமும் சிவாஜி கவனித்துக் கொண்டே இருக்க ‘ஒரு வேளை நாம நல்லா நடிக்கலையா?’ என்ற கேள்வி அவருக்குள் எழுந்திருக்கிறது.
இப்படியே ஆறேழு நாள்கள் செல்ல ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்ற சிவாஜி இரவு மணி 12 இருக்குமாம். அப்பொழுதே கே.எஸ்.ஜியை தொலைபேசியில் அழைத்து தன் மனதில் பட்டதை எல்லாம் படபடவென சொல்லியிருக்கிறார். ‘ நான் சரியா நடிக்கலைனா சொல்லிருங்க, திரும்பவும் நடிச்சுக் கொடுக்கிறேன், பத்மினியை எல்லார் முன்னாடியும் பாராட்டிறீங்க, சுற்றி இருக்கிறவர்கள் என்ன நினைப்பார்கள், நான் சரியா நடிக்கலையோனு தானே நினைப்பார்கள்’ என்றெல்லாம் பேசினாராம்.
அதற்கு பதில் கூறிய கே.எஸ்.ஜி ‘என்னக் கணேசா! ஒரு சின்ன கதாபாத்திரத்திலையே பிரம்மாதமா நடிக்கிறவர் நீங்கள், பத்மினி ஏற்று இருந்த கதாபாத்திரம் சவாலுக்கு உரியது. அவரை உற்சாகப்படுத்தி பேசினால் தானே நான் நினைக்கிற பெட்டர் கிடைக்கும், உங்க நடிப்பை யார் தான் குறை சொல்ல முடியும்? சின்ன குழந்தையாட்டம் பேசுறீங்களே?’ என்று கூறியிருக்கிறார்.அதை கேட்ட சிவாஜி அதன் பிறகு தான் அமைதியானராம். இந்த சுவாரஸ்ய தகவல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பற்றிய கட்டுரையில் உள்ளது.
இதையும் படிங்க : என் எல்லா வெற்றிக்கும் அவளே காரணம்!.. லோகேஷுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கா?!.