Connect with us
sivaji

Cinema History

அப்பவே சிவாஜி படத்துல ரெண்டு கிளைமேக்ஸ்!.. அது மட்டும் வந்திருந்தா செம ஹிட்டு!..

ஒரே படத்துக்கு ரெண்டு கிளைமாக்ஸ் எப்பவாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதுதான் பரீட்சைக்கு நேரமாச்சு படம். சிவாஜிகணேசனுடன் இணைந்து ஒய்.ஜி.மகேந்திரன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதுல 2 கிளைமாக்ஸ்.

ஒண்ணு ஒய.ஜி.மகேந்திரன் பரீட்சையில் ஜெயிக்கிற மாதிரி ஒரு சீன். இன்னொன்னு தோக்குற மாதிரி ஒரு சீன்.  பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் தனது நினைவலைகளை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பகிர்ந்து கொண்டார். இதுபற்றி ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்கிறார். அதற்கு ஒய்.ஜி.மகேந்திரன் என்ன சொல்கிறார்னு பாருங்க.

pnm

pnm

அந்தப் படத்துல ஒரு சின்ன தப்பு பண்ணிட்டோம் நாங்க. முடிவு சோகமா இல்லாம சந்தோஷமா முடிச்சிருந்தோம்னா அந்தப் படம் 200 நாள் ஓடியிருக்கும். நாடகத்துல 2வது கேரக்டர் இறந்து போற மாதிரி தான் காட்டினோம். எதுக்காக இதை சொல்றேன்னா நாடகத்துல அந்தத் தாக்கம் பெரிசா ஆடியன்ஸை ரீச்சாகாது.

நாடகம் நாம தள்ளி இருந்து பார்க்குற விஷயம். டெத்னா அப்படியே ஸ்கிரீன் விழுந்துடும். சினிமாவுல சிவாஜி சார் மடியில போட்டுக்கிட்டு அழுறத ஆடியன்ஸால சகிச்சிக்க முடியல. அதனால தான் 2 வது தடவையா கிளைமாக்ஸை மாத்துனாங்க.

நான் திரும்ப 10 வருஷம் கழிச்சி அதை நாடகமா போட்டேன். அப்போ சிவாஜி ரோல நான் பண்ணி நான் பண்ணின ரோல்ல வேற ஒருத்தர் பண்ணியிருந்தாரு. நான் எதுக்கு சொல்றேன்னா அந்த சந்தோஷமான முடிவை முதல்லயே வச்சிருந்தா அது 200 நாள் ஓடியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1982ல் முக்தா சீனிவாசன் முதலில் மேடை நாடகமாக இருந்த இந்தப் படத்தின் கதையை படமாக்கினார். அது தான் பரீட்சைக்கு நேரமாச்சு. முக்தா ராமசாமி தயாரிக்க, வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுதினார்.

சிவாஜி, சுஜாதா, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கர்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top