ப்ளாஷ்பேக்: சிவாஜி படத்துக்கு அப்பவே ரஷ்யாவில் அவ்ளோ மவுசு… எத்தனை பிரின்ட் போயிருக்குன்னு பாருங்க…

by sankaran v |   ( Updated:2025-04-16 20:43:06  )
sivaji
X

sivaji

பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி, ராதா, சத்யராஜ் உள்பட பலர் நடித்த சூப்பர்ஹிட் படம் முதல் மரியாதை. இந்தப் படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்ல. வெளிநாட்டிலும் பயங்கர வரவேற்பு. அதுவும் ரஷ்யாவில் படத்துக்கு அவ்ளோ மவுசு. யாருமே இதை எதிர்பார்க்கல. இதுகுறித்து அன்னக்கிளி படத்துக்குக் கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் என்ன சொல்றார்னு பாருங்க.

சோவியத் யூனியன்ல இருந்து சுகுமார் முதன்முறையாக ஒரு பிரிண்ட் வேணும்னாரு. அப்போ அவருக்கு ஒரு பிரிண்ட் 1லட்சம்னு சொல்றாங்க. 100 பிரிண்ட் வரை கேட்குறாரு. முதல்ல ஒரு பிரிண்ட் 26 ஆயிரம்தான். ஆனா 1லட்சம்னு சொல்லியும் வாங்கினாங்க. அதுவும் 100 பிரிண்ட் என்கிறார் பிரபல கதை வசனகர்த்தா செல்வராஜ்.

முதல் மரியாதை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் அன்னக்கிளி கதாசிரியர் செல்வராஜ். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக கதாசிரியர் செல்வராஜ் வீட்டை எல்லாம் அடமானம் வைத்தாராம். இவர் பாரதிராஜாவின் பல படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தப் படத்தை பாரதிராஜா அவருக்கு சூப்பர்ஹிட்டாக்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் உள்பட பலர் நடித்த படம் முதல் மரியாதை. இளையராஜாவின் இசையில் பாடல்கள் 8. அத்தனையும் தேன் சொட்டு. இந்தப் படத்தில் மலைச்சாமியா வந்து சிவாஜி கலக்குவார். ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், அருணா, ரஞ்சனி, தீபன்னு எல்லாருமே சிறப்பா நடிச்சிருப்பாங்க. ராதாவுக்கு குரல் கொடுத்தவர் ராதிகா.

அந்த நிலாவத்தான், பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம், ஏ குருவி, ராசாவே உன்ன நம்பி, ஏ கிளியிருக்கு, ஏறாத மலை மேல, நான் தானே அந்தக்குயில் ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

Next Story