ப்ளாஷ்பேக்: சிவாஜி படத்தில் எதிர்பாராத தீவிபத்து…! கூலாக தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

by sankaran v |   ( Updated:2025-04-09 06:03:17  )
sivaji ganesan
X

sivaji ganesan

ஒரு படப்பிடிப்பில் ஏதாவது பொருள்சேதமானால் தயாரிப்பாளர் பதறுவார். ஆனால் சிவாஜி பட விஷயத்திலோ தயாரிப்பாளர் கூலாகப் பதில் சொல்லி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

1968ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான படம் என் தம்பி. சிவாஜி, சரோஜாதேவி நடித்த சூப்பர்ஹிட் படம். கே.பாலாஜி தயாரித்து நடித்துள்ளார். கண்ணாம்பா, பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், நாகேஷ், ரோஜா ரமணி, ராஜசுலோசனா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். முத்து நகையே, அடியை நேற்று பிறந்தவள், முந்தி முந்தி, அய்யய்யா மெல்ல, தட்டட்டும் கை ஆகிய பாடல்கள் உள்ளன.

இந்தப் படத்தில் புதுமையான கதை அம்சம். இது ஒரு ரீமேக் படம். இந்தப் படத்தின் போது எதிர்பாராத ஒரு தீ விபத்து எரிந்து படத்திற்காக போடப்பட்ட செட் முழுவதும் எரிந்து நாசமானது. இதுபற்றி பார்ப்போமா…

en thambi, balajiஎன் தம்பி படத்தில் ஒரு சாட்டையடி பாடலின் இறுதியில் சிவாஜி தனது தம்பி பாலாஜியை அடித்து புத்தி புகட்ட வேண்டும். அந்தக் காட்சியில் பாலாஜி பற்ற வைத்த கேஸ் லைட்டர் நெருப்பு விழுந்து செட்டே தீப்பற்றியதாம். அந்த செட்டில் இருந்த மோட்டார் எரிந்து தீக்கிரையானதாம்.

இதுபற்றி தயாரிப்பாளர் பாலாஜியிடம் கேட்டபோது நம் படத்தின் மீதான பல இயக்குனர்களின் கண் திருஷ்டியும் இந்த நெருப்பை விடக் கொடுமையானது என்றாராம். ஆனால் பாடல் பிரமாதமாக படமாகி விட்டது. படமும் 100 நாள்கள் ஓடி மாபெரும் ஹிட்டானது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என் தம்பி படம் நடிக்கும்போது ஊட்டி வரை உறவு, தங்கச்சுரங்கம் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். அதனால் இந்த 3 படங்களிலும் சிவாஜியைப் பார்க்கும்போது ஒரே மாதிரியான கெட்டப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story