சிவாஜிக்கு கொடுக்காம யாருக்கு கொடுப்பீங்க?!.. பொங்கியெழுந்த தயாரிப்பாளர்.. எதற்காக தெரியுமா?...
தென்னிந்திய சினிமாவில் நடிப்பு பல்கலைக்கழகமாக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி பெருமாள் முதலியார் துணையுடன் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் ஈர்ப்பது தான் இவரின் தனி திறமையாக பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 288 படங்களில் நடித்துள்ளார். தமிழில் 250 படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே நாயகன் சிவாஜி மட்டும் தான்.
நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி, சிங்கக்குரலோன் என மக்களால் அறியப்படுகிறார். தெளிவான உச்சரிப்பு, நல்ல குரல்வளம் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். சரித்திரம் , புராணம், சமூகம், குடும்பம் போன்ற அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தார் சிவாஜி.
நீண்ட வரிகளையுடைய வசனங்களை எளிதாக உள்வாங்கிக் கொண்டு அதை மிகவும் உணர்ச்சி பெருக்கோடு வெளிப்படுத்துவதில் வல்லவர் சிவாஜி. சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் உயரிய விருதான செவாலியர் விருதையும் வென்றுள்ளார்.இத்தனை சிறப்புமிக்க சிவாஜியை மத்திய அரசு ஏனோ புறக்கணித்திருக்கிறது. ஆம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஒரு முறை கூட பெறவில்லை சிவாஜி. அவருக்கு தேசிய விருதை கொடுக்க வேண்டும் என்றால் எத்தனை எத்தனை படங்களுக்கு கொடுக்கலாம் தெரியுமா?
ஆனால் மத்திய அரசு அதை செய்ய தவறியது. அதை எதிர்த்து பல பிரபலங்கள் குரல் கொடுத்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் இன்னும் ஒருபடி மேலாக மத்திய அரசை கண்டித்து தனது கண்டனத்தை மிகப்பெரிய அளவில் தெரிவித்திருக்கிறார். பார் மகளே பார், தேனும் பாலும், நான் சொல்லும் ரகசியம், ராஜம்பாள் போன்ற படங்களை தயாரித்த வி.சி.சுப்புராம் தான்.
சுப்புராம் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். மத்திய அரசு தேர்வுக் குழுவில் சுப்புராம் இருந்த பொழுது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை ஒதுக்கிவிட்டு வேறொரு தரமற்ற படத்திற்கு விருது அறிவித்த பொழுது அப்பொழுதே மத்திய அரசை கண்டித்து குரல் எழுப்பியவர் தான் சுப்புராம்.
இதையும் படிங்க : தோல்வி படத்தை மீண்டும் எடுத்து ஆஸ்கர் வரை சென்ற சிவாஜி!.. அட இது செம மேட்டரு!..
மேலும் சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜிக்கு கொடுப்பதை விட்டு விட்டு மூன்றாம் தர நடிகருக்கு கொடுத்த போது தன் அபாய குரலால் மத்திய அரசை மிகவும் கண்டித்தார். எத்தனையோ பேர் சிவாஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தாலும் சுப்புராமின் இந்த செயல் தான் அனைவரையும் மிரள வைத்தது.