சிவாஜி ஜோடி அம்பிகாவா? ரஜினி, கமல் கடும் எதிர்ப்பு… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

by sankaran v |   ( Updated:2025-04-12 10:38:53  )
ambika, rajni, kamal, sivaji
X

ambika, rajni, kamal, sivaji

தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகமாய் மின்னியவர் சிவாஜிகணேசன். எத்தகைய கேரக்டர் என்றாலும் அதற்கு உயிர் கொடுத்து விடுவார். இவரது பாடிலாங்குவேஜ் இன்றும் பல நடிகர்களுக்குப் பாடம்.

படப்பிடிப்புக்கு ஒரு போதும் காலதாமதமாக வரமாட்டார். நாளைய காட்சி என்னன்னு தெரிந்து அதற்கான வசனத்தை முதல்நாளே வாங்கிச் சென்று தயாராகி விடுவார். சிவாஜியிடம் ஒரு வசனத்தை இரு முறை வாசித்துக் காட்டினால் போதும். உடனே நினைவில் கொண்டு அபாரமாக அதைப் பேசி விடுவார்.

சிவாஜி ஒரு காலகட்டத்தில் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். தன் மகன் பிரபுவுடன் இவர் நடித்த சந்திப்பு, வெள்ளைரோஜா, சுமங்கலி போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். 1984ல் சிவாஜி ராஜசேகர் என்ற கேரக்டரில் வாழ்க்கை படத்தில் நடித்தார். இது 1983ல் இந்தியில் ராஜேஷ்கண்ணா நடித்த அவதார் என்ற படத்தின் ரீமேக். சிவாஜியின் வாழ்க்கை.

vaazhkaiபடத்தில் நிழல்கள் ரவி, பாண்டியன், ஜெய்சங்கர், நம்பியார், ரவீந்திரன் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி அம்பிகா. இந்தப் படத்தைத் தயாரித்தவர் சித்ரா லட்சுமணன். இயக்கியவர் வி.சி.ராஜேந்திரன். இந்தப் படத்துக்கு முன்பு வரை சிவாஜிக்கு ஜோடின்னா சுஜாதா அல்லது கே.ஆர்.விஜயாதான்.

அம்பிகா இந்தக் கேரக்டருக்கு செட்டாக மாட்டாங்கன்னு தயாரிப்பாளரிடம் பலரும் சொன்னாங்களாம். கமல் கூட சொல்லி இருக்கிறார். ரஜினிகாந்தோ சித்ரா நீங்க விஷப்பரீட்சை எழுதுறீங்கன்னு சொன்னாராம். ஆனால் தயாரிப்பாளர் தனது முடிவில் தெளிவாக இருந்ததால் அம்பிகாவையே ஜோடியாக நடித்தாராம்.

1984ல் சிவாஜி, அம்பிகா நடித்த படம் வாழ்க்கை. பாண்டியன், ஜெய்சங்கர், நம்பியார், நிழல்கள் ரவி, சில்க், வி.கே.ராமசாமி, மனோரமா, ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய்சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். அன்பிருக்கும் உள்ளங்களே, காலம் மாறலாம், கட்டிக் கொள்ளவா, மனமே நீ, மெல்ல மெல்ல, யாவும் நீயப்பா உள்பட பல பாடல்கள் உள்ளன.

Next Story