Cinema History
சிவாஜி சொன்ன ‘நோ’வால் நடிகையின் தலையெழுத்தே மாறிய சம்பவம்! எப்படி என்ன நடந்தது தெரியுமா?
Nadikar Thilagam: தமிழ் திரையுலகில் சிவாஜி எப்பேற்பட்ட ஆளுமையாக இருந்தார் என அனைவருக்கும் தெரியும். வளரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு வழிகோலாக இன்றுவரை இருந்து வருகிறார். அவரின் படங்கள் மூலமாக நடிப்பைக் கற்றுக் கொண்டு வந்தவர்கள் ஏராளம்.
எத்தனையோ படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்த சிவாஜி பட்டிக்காடா பட்டணம்மா படத்தில் சுத்த கிராமத்தனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருப்பார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே ஏக்கம் எக்குதப்பா எகிறுது!.. டைட் உடையில் ட்ரீட் வைக்கும் நித்தி அகர்வால்!..
அந்த நேரத்தில் சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கு இடையே சிறு உரசல் ஏற்பட்டிருந்ததாம். அதனால் முதலில் படக்குழு சிவாஜிக்கு ஜோடியாக நடிகை ஹேமமாலினியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதை சிவாஜியிடமும் வந்து சொல்லியிருக்கிறார்கள். படத்தில் ஹேமமாலினிதான் ஹீரோயின் என கேள்விப்பட்டதும் இவங்கள இங்க யாருக்காவது தெரியுமா? என கேட்டாராம். உடனே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நம் மூலமாக இவர் வளர்ச்சியடையட்டும் என சொல்லியிருக்கிறார்.
உடனே சிவாஜி அதெல்லாம் வேண்டாம். இந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரே ஆளு ஜெயலலிதா. அதனால் ஜெயலலிதாவிடம் நான் சொன்னேன் என்று கேளுங்கள் என சொல்லி அனுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: மாஸ் எண்ட்ரி தெரியும்! ஆனா இது மாஸ் எக்ஸிட்! – பிரதீப் விஷயத்தில் என்ன நடந்தது? உண்மையை சொன்ன யுகி
ஆனால் தயாரிப்பாளர் சிவாஜி மீதுள்ள கோவத்தால் ஜெயலலிதா எப்படியும் நடிக்க மாட்டார் என்று நினைத்தே போய் ஜெயலலிதாவிடம் கேட்டார்களாம்.உடனே ஜெயலலிதா ‘இதற்கு சிவாஜி சம்மதம் சொன்னாரா? ’ என கேட்டுவிட்டு தான் பின் நடிக்க வந்தாராம்.
என்னதான் இருவருக்குள்ளும் பிரச்சினை என்றாலும் தொழில் வேற. பிரச்சினை வேற என இருவருமே நிரூபித்திருக்கிறார்கள். இதற்கிடையில் அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இதையும் படிங்க: அது ஃபேக்!.. பிரதீப் ஆண்டனி சோஷியல் மீடியா ஐடின்னு ஃபயர் விடாதீங்க.. எல்லாமே போலியாம்?..
ஒருவேளை ஹேமமாலினி மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால் ஹிந்தியை விட தமிழில் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வந்து ஒரு முன்னணி நடிகையாக மாறியிருப்பார்,