Connect with us
yugi

Biggboss Tamil 7

மாஸ் எண்ட்ரி தெரியும்! ஆனா இது மாஸ் எக்ஸிட்! – பிரதீப் விஷயத்தில் என்ன நடந்தது? உண்மையை சொன்ன யுகி

Yugendhiran about pradeep: பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக justice for pradeep  என்ற ஹேஷ் டேக்கே வைரலாகிவருகின்றது. கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது, பெண்களிடம் தவறான அணுகுமுறையில் பழகியது என பெண்கள் பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை முன்னெடுத்து வந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றினார்கள்.

அதாவது ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பினார்கள். இவர்களுக்கு ஆதரவாக கமலும் பேசியது இணைய வாசிகளுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் பிரதீப் எப்படிப்பட்டவர், மற்றவர்களால் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை போனவாரம் வெளிவந்த யுகேந்திரன் கூறினார்.

   

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..

சக போட்டியாளர்கள் சொன்னது எல்லாமே அப்பட்டமான பொய். பிரதீப் அப்படிப்பட்டவரே இல்லை. வார்த்தைகளால் அப்படி பேசுவாரே தவிர உடல் ரீதியாக எந்த அச்சுறுத்தலும் நான் இருந்த வரை அவர் பண்ணியதில்லை. அதிலும் அவர் சிறுவயதில் இருந்தே கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு வளர்ந்திருக்கிறார்.

அதனால்தான் அந்த வார்த்தைகளை பேச அவர் தயங்கவில்லை. ஆனால் உடல் ரீதியாகவோ பாலுணர்வை தூண்டும் விதமாகவோ பிரதீப் அப்படி நடந்து கொள்ளவும் இல்லை. நடக்கவும் மாட்டார் என்பதே என் நம்பிக்கை. மேலும் நடு ராத்திரியில் தூங்காமல் வெறிக்க வெறிக்க பார்க்கிறார் என்றெல்லாம் புகார் வந்தது.

ஆனால் உண்மையிலேயே இரவு நேரத்தில் பிரதீப் தூங்க கொஞ்சம் கஷ்டப்படுவார். அதுவும் அங்கு கொசுத்தொல்லைகள் கொஞ்சம் அதிகம். அதனால் வெளியே போய் நடந்து கொண்டிருப்பார். அதையும் மீறி சில நேரம் பிரதீப் அசந்து தூங்கினாலும் அங்கு இருக்கிற இளஞ்ஜோடிகளான பிரதீப்பும் ஐஸும் சேர்ந்து சமையலறையில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படிங்க: அஜித்தே சூட்டிங் போய்டாப்ல! உனக்கு என்ன தலைவா? கைவிடப்பட்டதா சிம்புவின் ப்ராஜக்ட்?

ஏதாவது டாஸ்க் சம்பந்தமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள் என யுகேந்திரன் கூறினார். ஒரு வேளை பிரதீப் மீண்டும் வீட்டிற்குள் போக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு யுகேந்திரன் ‘தயவு செய்து வேண்டானுதான் சொல்வேன். இது ஒரு மாஸ் எக்ஸிட் அவருக்கு. வெளியே வந்த பிறகு கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். அதையும் மீறி போனால் முதல் இடத்தைத்தான் பிடிக்க வேண்டும் பிரதீப்’ என்று யுகேந்திரன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் அதிகமான கெட்ட வார்த்தைகளை பிரதீப்பை விட ரொம்பவும் பேசியது மாயாவும் பூர்ணிமாவும்தான் என்றும் மாயா ஒரு கலீஜ் என்றும் பூர்ணிமாவை ஸ்லோ பாய்ஸன் என்றும் பூர்ணிமாவை இந்த வாரம் எலிமினேட் செய்தால் கண்டிப்பாக வீட்டிற்குள் ஒரு கேம் சேஞ்ச் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் யூகேந்திரன் கூறினார்.

இதையும் படிங்க: பார்த்தவுடனே கணித்த இளையராஜா!.. தேடிவந்த வாய்ப்பு!.. மிஸ் பண்ணிய பாண்டியராஜன்..

வலது கையாக இருந்த பூர்ணிமா வெளியே போகும் போது மாயா தனி ஆளாக இருப்பார். அர்ச்சனா மாயாவுக்கு ஒரு பெரிய டஃப் ப்ளேயராக மாறும் போது இன்னும் வரும் காலங்களில் இந்த விளையாட்டு இன்னும் விறுவிறுப்பாக போகும் என்றும் யுகேந்திரன் கூறினார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top