More
Categories: Cinema History Cinema News latest news

தோல்விகளை சந்தித்த சிவாஜியை தூக்கிவிட்ட ஹிந்தி ரீமேக் படம்!… எந்த படம்னு தெரியுமா?…

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் பழங்கால முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின் கர்ணன், சரஸ்வதி சபதம், பாசமலர் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கர்ணன் படத்தில் இவரின் நடிப்பு திரையுலகமே வியந்து போகும் வகையில் இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனாய் இவரின் நடிப்பு இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது.மேலும் இவர்  அரசியலின் மீது கொண்ட மோகத்தினால் திராவிட கழகத்தில் சேர்ந்தார். ஆனால் அரசியலில் இவரின் ஆதிக்கம் நிலைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

இடைக்காலத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான படங்கள்தான் அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, உனக்காக நான், சித்ரா பெளர்ணமி போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்விகளை தழுவியது. இதனால் சிவாஜியின் சகாப்தம் முடிந்தது என பலரும் நினைத்தனர்.

பின் தெலுங்கு பட தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு வெளியான படம்தான் உத்தமன். இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக மஞ்சுளா நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு கே.வி.மஹாதேவன் இசையமைத்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே எங்கள் தங்கராஜா திரைப்படம் வெற்றியடைந்தது. அதனாலேயே ராஜேந்திர பிரசாத் தமிழில் எத்தனை படம் தயாரித்தாலும் சிவாஜியை வைத்துதான் என முடிவெடுத்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…

சிவாஜியின் பல பட தோல்விகளுக்கு பின் இவர் படங்கள் ஓடுமா என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இப்படம் வெளியானது. ஹிந்தியில் வெளியான ஆ கலே லாக் ஜா திரைப்படத்தினை தழுவிய படம்தான் உத்தமன் திரைப்படம்.

இப்படம் சிவாஜிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படம் தமிழகத்திலேயே கிட்டதட்ட 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. மேலும் இப்படம் இலங்கையிலும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. இலங்கையில் கிட்டதட்ட 200 நாட்கள் ஓடிய சிவாஜி படம் இதுதான். இப்படத்திற்கு பின் சிவாஜி நடித்த அனைத்து திரைப்படக்களும் இவருக்கு வெற்றி கனியை தேடி தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..

Published by
amutha raja

Recent Posts