More
Categories: Cinema News latest news

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹெலிகாப்டரை காட்டிய படம்! நூலிழையில் உயிர்தப்பிய சிவாஜி

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு என தனி இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆக்ரோஷமான நடிப்பாலும் சிறந்த தமிழ் உச்சரிப்பாலும் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் தன் ஆதிக்கத்தை செலுத்தினார் சிவாஜி.

இவர் நடித்த ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். நடிக்க வரும் ஒவ்வொருவரும் சிவாஜி நடித்த படங்களை பார்த்தாலே போதும் நடிப்பிற்கான அனைத்து உத்தியையும் கற்றுக் கொள்ளலாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அமராவதி படத்தில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா? எஸ்.பி.பி கொடுத்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட அஜித்..!

அந்தளவுக்கு சினிமாவை பற்றியும் நடிப்பை பற்றியும் ஆக்குவேறா ஆணிவேறாக கரைத்து வைத்திருப்பவர் சிவாஜி என அனைவருக்கும் தெரியும். சினிமாவில் எத்தனையோ புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன்.

அந்த வகையில் சிவாஜி நடித்த ஒரு படத்தில் தான் ஹெலிகாப்டரை முதன் முதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் படம் ‘சிவந்த மண்’ என பிரபல திரைவிமர்சகர் இதயக்கனி விஜயன் கூறினார். அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் வெளி நாடுகளில் படமாக்கப்பட்டது.

இதையும் படிங்க: வீட்டில் பார்த்த பெண் முதல் பணத்தாசை பிடித்த நடிகை வரை.. காதலால் கூனிக்குறுகிய ரஜினிகாந்த்

படத்தின் கதைப்படி புரட்சியாளர்களை நம்பியார் ஆள்கள் ஹெலிகாப்டரில் துரத்துவது போன்ற சீன். ஹெலிகாப்டரில் இருந்து குண்டுகளை வீசுவது, துப்பாக்கியால் சுடுவது என்ற காட்சி படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது எல்லாரும் பயந்து ஓட வேண்டுமாம்.

சிவாஜியும் சேர்ந்து ஓட தரையிலிருந்து சரியான உயர அளவு தெரியாமல் ஹெலிகாப்டர் சிவாஜியின் அருகில் வந்ததாம். இதை அறிந்து கொண்ட சிவாஜி ஓடிக் கொண்டே இருக்க வரும் வழியில் பெரிய குழி இருந்ததாம். உடனே சிவாஜி அந்த குழிக்குள் விழுந்தாராம். அதன் பிறகு ஹெலிகாப்டர் அவரை தாண்டி போயிருக்கிறது. அந்த குழி மட்டும் இல்லையென்றால் ஹெலிகாப்டர் சிவாஜியின் தலையில் தட்டியிருக்கும் என இதயக்கனி விஜயன் கூறினார்.

இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

 

Published by
Rohini