சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். அதர்வா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீலீலா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றைய தலைமுறை நடிகர்கள் ஒன்று கூடி நடிக்கும் திரைப்படம் என்பதால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அதர்வா மற்றும் ரவி மோகன் ஆகிய மூவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பும் உருவாகி இருக்கிறது.
அதை இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியிலேயே நாம் பார்த்தோம். ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசியது ரசிகர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதே சமயம் ரவி மோகன் தனக்கு சீனியர் என்பதாலும் அதற்கு ஏற்ப மரியாதையும் கொடுத்து பேசினார் சிவகார்த்திகேயன். அதர்வாவை தன்னுடைய தம்பி மாதிரி என்று சிவகார்த்திகேயன் கூறியதும் ஆச்சரியமாக இருந்தது.
பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்சனையில் இன்னும் இழுபறி போய்க்கொண்டே இருக்கின்றது. ஜனவரி 10ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள். அதற்கு இடையில் தணிக்கை குழு பிரச்சினை மற்றும் இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ராஜேந்திரன் கொடுத்த வழக்கு என அடுத்தடுத்த சிக்கல்களில் இந்த படம் மாட்டி இருக்கிறது.
இந்த நிலையில் அதர்வா, இதயம் முரளி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிக்கிறார். இன்னும் சில தினங்களில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கின்றது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அந்த படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இதயம் முரளி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒரு சில நடிகர்களை அணுகினார்கள்.

தனுஷ், ரவி மோகன் என ஆகாஷ் பாஸ்கரன் பேனரில் யாரெல்லாம் நடித்தார்களோ அவர்களை எல்லாம் அணுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக சமீபத்திய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
