Cinema News
ரஜினி சாருக்கு பாட்டு எழுதுறதுக்கா நீ வந்த.?! தனது நண்பனை விளாசிய சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் இயக்குனராக வருபவர்கள் நடிகர்களாக மாறிவிடுவர். நடிகர்களாக வருவபர்கள் இயக்குனர்களாக மாறிவிடுவர். அப்படிதான், இயக்குனர் ஷங்கர் நடிகராக வர ஆசைப்பட்டவர் இயக்குனராகி விட்டார். விஷால், சித்தார்த், கார்த்தி போன்றோர் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள் நடிகர்களாகி விட்டனர்
சிலர் மட்டுமே தாங்கள் எதற்கு வந்தோமோ, அதற்காக தொடர்ந்து பாடுபடுவர். அப்படி தான் எஸ்.ஜே.சூர்யா முதலில் இயக்குனராகி அடுத்து தான் தனக்கு விருப்பமான நடிப்பு துறையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அது போல, இயக்குனராக வேண்டும் என தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். இவர் சிவகார்த்திகேயன் நண்பர் . இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளர். பிறகு தான் கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அருண்ராஜா.
இதையும் படியுங்களேன் – தலைவரே இத நான் வச்சிக்கட்டுமா.?! எம்.ஜி.ஆரிடம் உரிமையாக அதை கேட்ட சத்யராஜ்.!
இது பற்றி இயக்குனர் அருண்ராஜா கூறுகையில், நடிகராக சில படங்களில் நடித்து வந்தேன். அதன் பிறகு பாடல்கள் எழுத தொடங்கினேன். ரஜினி சாரின் கபாலி படத்தில் பாடல் எழுதி முடித்துவிட்டேன். அந்த சமயம் சிவா என்னிடம் வந்தான். நீ எதுக்கு இங்க வந்த ? ரஜினி சார் வரைக்கும் பாட்டு எழுதி முடிச்சிட்ட , இதுக்கப்புறம் நீ எதுக்கு வந்தீயோ அந்த வேலையை பாரு. என மீண்டும் இயக்குனர் வேலையை ஆரம்பிக்க ஞாபகப்படுத்தினான். ‘
அதன் பின்னர் எழுதிய கதை தான் கனா. அந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.