தமிழில் மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இத்திரைப்படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கினார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவிட்டாலும் இவரின் அடுத்த படமான எதிர்நீச்சல் மூலம் இவர் வெற்றியை தழுவினார்.
மேலும் இவர் காமெடி கலந்த எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் வல்லவர். ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைகாட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பின் தனது கடின முயற்சியினால் சினிமாவில் நுழைந்தார்.
இதையும் வாசிங்க:இன்னைக்கு வரலனா அவ்வளவு தான் பாத்துங்கோங்க… எக்ஸில் வம்பு செய்யும் விஜய் ஃபேன்ஸ்… என்ன சேதி?
இவர் மற்றும் நடிகர் சூரி இணைந்து நடிக்கும் படங்கள் அனைத்துமே இவர்களின் காமெடிக்காகவே வெற்றி அடையும். வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது காமெடி கலந்த கதாபாத்திரத்தினை மிக அழகாக காட்டினார்.
பின் இவர் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல், சீமராஜா, கனா போன்ற திரைப்படங்கள் இவருக்கு தோல்வியையே சம்பாதித்தன. பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனக்கான இடத்தினை பிடித்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
இதையும் வாசிங்க:விஜயிற்கு இந்த பழக்கமே கிடையாது… பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…! அனுஷ்காகே இப்டியா?
இவர் தற்போது இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ராகுல் பிரித் சிங், இஷா கோபிகர் போன்ற நடசத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். ஆனால் தர்போது ரஹ்மானுக்கு வேறு சில கான்செர்ட்டுகள் இருப்பதால் அதற்கு பின்னரே இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம்.
இப்பாடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கலுக்குதான் ரிலீஸ் ஆகவிருக்கிறது என கூறப்படுகிறது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது சிவகார்த்திகேயன் படத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையும் வாசிங்க:இவ்வளவு நடந்தும் கூலா வீடியோ போட்ட ரஹ்மான்!. எங்களுக்குதான் மறக்காதே சார்!… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…
தற்போது கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதால் அயலான் திரைப்படமும் பாதிக்ககூடாது என்பதற்காக படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் இன்னும் சில மாதங்கள் கிடைத்தால் படத்தின் தரத்தினை இன்னும் உயர்த்தலாம் எனும் நோக்கில் சிவகார்த்திகேயனே இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. எது எப்படியோ சிவகார்த்திகேயன் அவரது ரசிகர்களுக்கு பொங்கலுக்குதான் விருந்து படைக்க போகிறார் போல.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…