அயலானை பிரிஞ்சி இருக்க முடியல போல! பிறந்த நாள் ட்ரீட்டாக சிவகார்த்திகேயன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்

Published on: January 20, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது அயலான் திரைப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்தார்.

அவர்களுடன் யோகிபாபு, கோதண்டம் போன்ற பல முக்கிய காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். படம் வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்திய படமாகவே அமைந்தது. இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இதையும் படிங்க: என்ன கண்ட்ராவி டிரெஸ்டா இது!.. கிளாமர் காட்டுறேன்னு ட்ரோலில் சிக்கிய ஸ்ருதி!..

இந்தப் படத்தை நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார்தான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிக்குமாருடன் மற்றுமொரு புதிய படத்தில் இணைய ஆசைப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது.

அந்தளவுக்கு அயலான் திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற  படமாக அமைந்ததா என்றால் இல்லை. ஆனாலும் ரவிக்குமாருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் விரும்புவதாகவே தெரிகிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து மெகா படங்களில் பிசியான தனுஷ்… இயக்குனராகவும் பட்டையைக் கிளப்புவாரா?..

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17 ஆம் தேதி ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: சிம்புவுக்கும், எனக்கும் நடந்த சண்டை உண்மையா! 16 வருட ரகசியத்தை சொன்ன பப்லு!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.