சிவகார்த்திகேயன் நடித்து ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக வேண்டிய பராசக்தி படத்தின் சென்சார் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய செம்மொழி என்ற கதையை திருடி இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் உதவி இயக்குனர் ராஜேந்திரன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
பராசக்தி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதை செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி 2010 ஆம் ஆண்டு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ராஜேந்திரன் பதிவு செய்திருந்தார். அதனால் ராஜேந்திரன் பராசக்தி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையில் தணிக்கை குழுவும் இந்த படத்தில் சில காட்சிகளை கட் செய்துள்ளது. அதை ரிவைசிங் கமிட்டிக்கு பட குழு அனுப்பி இருக்கிறது. அதனால் இந்த படம் ரிலீஸ் பிரச்சனையில் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே வருகின்றது. இதற்கிடையில் ஜனநாயகனுக்கு எதிராக பராசக்தி திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக சிவகார்த்திகேயனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது ஜனநாயகனுக்கு எதிராக பராசக்திக்காக வைக்கப்படும் பேனரில் துவங்கி எல்லா விஷயத்திலும் சிவகார்த்திகேயனின் பங்கு பெரும்பாலும் இருந்து வருகிறது.

அவர் விஜய்க்கு எதிராக செயல்பட துவங்கி விட்டார் என்றும் சிவகார்த்திகேயன் ஒரு விசுவாசமான ஆள் இல்லை என்றும் யாரெல்லாம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்களோ அவரை வளர்த்து விட்டார்களோ அவர்களை எல்லாம் துச்சமாக எட்டி உதைத்தவர் தான் சிவகார்த்திகேயன் என்றும் பிஸ்மி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.