அதையே பார்த்தவன்.. இதெல்லாம் தூசு! அதெப்படி மாற்ற முடியும்? SK 21ல் கமல் செவி சாய்ப்பாரா?

Published on: February 23, 2024
siva
---Advertisement---

Sivakarthikeyan Kamal: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது அமரன் திரைப்படம். சமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் பிறந்த நாளின் போது படத்தின் டீஸர் மற்றும் டைட்டில் வெளியானது.

ராணுவ அதிகாரியின் கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்தான் இந்தப் படம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் படத்தின் டீஸர் வெளியானதில் இருந்தே படத்தை பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: ஷங்கர் கூட முதல் மருமகனுக்காக ஆதரவாக பேசினாரா? ஆனால் மகள் செய்த துணிச்சலான சம்பவம்!…

பல சேனல்களில் அமரன் திரைப்படம் ஒரு வேளை இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படமாக இருக்குமோ என்று செய்திகள் வெளிவர அதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் அமரன் படத்தை கைவிட வேண்டும் என்று கூறி அந்த போராட்டங்களில் ஈடுபட்டனர்,

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் கமலின் உருவ படங்களையும் எரித்தனர். இன்னும் கூடுதலாக இவர்களுடன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அசிங்கமாக திட்டிய திரைப்பிரபலங்கள்!.. கேப்டனின் ரியாக்‌ஷன் இதுதான்!. நடிகர் சொன்ன தகவல்!..

கமல் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை போலதான் ஒவ்வொரு முறையும் நடந்து வருகிறது, இதே போல் ஒரு பிரச்சினைதான் 12 வருடங்களுக்கு முன்பு விஸ்வரூபம் படத்திற்கு நடந்தது. அந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்திருக்கிறார் கமல் என அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்போது இவர் தயாரிக்கும் படத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவிற்காக உயிர்தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜின் வரலாறு படமாகத்தான் அமரன் உருவாகியிருக்கிறது. ஒரு உண்மைச்சம்பவத்தை எடுக்கும் போது அதில் உள்ள திரைக்கதையை எப்படி மாற்ற முடியும் என பல திரைப்பிரலங்கள் கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: திடீரென எஸ்கேப் ஆன நடிகை! ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடந்த ட்விஸ்ட்.. நல்லவேளை அவங்க நடிக்கல

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.