More
Categories: Cinema News latest news

அச்சச்சோ அந்த மேட்டர்!.. சிவகார்த்திகேயன் உருவ படம் எரிப்பு.. குண்டர் சட்டத்தில் கைது செய்யணுமாம்!..

நடிகர் சிவகார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திடீரென சிறுபான்மையின மக்கள் போராட்டத்தில் குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசனின் உருவ படங்களை எரித்து போராட்டத்தில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் குதித்துள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்ன கன்றாவி இதெல்லாம் ஸ்ரேயா!.. இந்த டிரெஸ்லாம் போட்டா குழந்தையுடன் போஸ் கொடுப்பாங்க?..

12 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் வெடித்தன. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது.

ஆனால், வருஷத்துக்கு பல பாலிவுட் படங்கள் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை வைத்து தான் படங்களாக வெளியாகி வருகின்றன. சமீபத்தில், வெளியான கேரளா ஸ்டோரி படத்தில் கேரளாவில் உள்ள இந்து பெண்களை மதமாற்றம் செய்து இஸ்லாமிய தீவிரவாதிகள் அடிமைகளாக மாற்றி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாக மாற்றுவதாக படத்தை எடுத்தனர். அந்த படத்துக்கு தமிழ்நாடு, கேரளாவில் பெரும் எதிர்ப்பு வந்த நிலையிலும், வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து 200 கோடி ரூபாய் வரை வசூலை அந்த படம் ஈட்டியது.

இதையும் படிங்க: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!.. பாலா இயக்கத்தில் இருந்து தெறித்து ஓடிய சூர்யா!.. இதுதான் காரணம்?

இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 16ம் தேதி அமரன் படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்டோர் இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாக இருக்குமோ என வீடியோக்களை வெளியிட தற்போது திருச்சியில் உள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சிவகார்த்திகேயன் படத்தை தடை செய்ய வேண்டும், சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரன் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு படமாகத்தான் இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Saranya M

Recent Posts