என்ன கன்றாவி இதெல்லாம் ஸ்ரேயா!.. இந்த டிரெஸ்லாம் போட்டா குழந்தையுடன் போஸ் கொடுப்பாங்க?..

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் மழை, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம் என வரிசையாக பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா திடீரென ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

2018ம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவின் திருமணம் நடைபெற்ற நிலையில், 2021ம் ஆண்டு ஸ்ரேயாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அடிக்கடி தனது குழந்தையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா, 41 வயதிலும் தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இதையும் படிங்க: மங்காத்தா 2 இதனால்தான் வரல.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த நடிகர்! என்ன தல நீங்க?

ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகவும் ராம்சரணுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார் ஸ்ரேயா. மேலும், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தலை காட்டி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில், மோசமான கவர்ச்சி உடையில் ஸ்ரேயா போட்டோஷூட் நடத்திய போது தனது குழந்தையையும் தூக்கிக் கொஞ்சும் போட்டோக்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்!.. ராதிகா சரத்குமார் எந்த ஊரில் இருக்காங்க பாருங்க!..

குழந்தையுடன் இந்த டிரெஸ் எல்லாம் போட்டு போட்டோஷூட் நடத்தலாமா ஸ்ரேயா என சில நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், சூட்டிங் ஒன்றில் பிசியாக இருந்தபோது வீட்டில் இருந்த குழந்தை எதிலோ கை வைத்து தனது கையை சுட்டுக் கொண்டது என்றும் அதற்காக இனிமேல் சூட்டிங் ஸ்பாட்களுக்கு மகளை அழைத்துச் செல்லும் முடிவுக்கு ஸ்ரேயா வந்துவிட்டதாகவும் அதன் காரணமாகவே இப்படியொரு போட்டோஷூட் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Related Articles

Next Story