‘மகாராஜா’ படத்தால் இம்பிரஸ் ஆன எஸ்.கே.! பட இயக்குனருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக தயாரிப்பாளராக பாடகராக பாடல் ஆசிரியராக என பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக இந்த கோலிவுட்டில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இன்று விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இருந்து மக்களை மகிழ்வித்து வருகிறார் சிவகார்த்திகேயன். விஜயை போல சிவகார்த்திகேயனுக்கும் கிட்ஸ் ஆடியன்ஸ் அதிகமாகவே இருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும் விரும்பும் நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இந்த நிலையில் மகாராஜா படத்தின் இயக்குனரான நித்திலன் சாமிநாதனை அழைத்து சிவகார்த்திகேயன் பாராட்டிய ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி வந்து என்ன செஞ்சாங்க? விஜய் அரசியலில் இருக்கும் பவரே வேற.. பொங்கிய ஷியாம்
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதிக்கு அது ஐம்பதாவது திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். படம் வெளியாகி இன்றுவரை திரையரங்குகளில் ஹவுஸ்புல்லா ஓடிக் கொண்டு வருகிறது. அந்த அளவுக்கு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் கதை அமைப்பு அது நகரும் விதம் என ஒவ்வொரு காட்சிகளிலும் நித்திலன் சுவாமிநாதன் அவருடைய பங்களிப்பை அதிகமாகவே கொடுத்திருக்கிறார். அதற்கு ஏற்ப விஜய் சேதுபதியும் தனது எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் மிகவும் பிரமித்து நித்திலன் சாமிநாதனை தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டை தெரிவித்திருக்கிறார் .
இதையும் படிங்க: கழண்டு விழுந்திருமோன்னு பயமா இருக்கு!.. கர்ச்சீப் சைஸ் துணியில் அழகை காட்டும் ஜான்வி!…
அந்த புகைப்படம் தான் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. கூடிய சீக்கிரம் நித்திலன் சாமிநாதனுடன் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் இணைவார் என்று கோடம்பாக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. நித்திலன் சாமிநாதனுக்கு மகாராஜா திரைப்படம் இரண்டாவதுபடமாகும்.
இதற்கு முன் குரங்கு பொம்மை என்ற படத்தை எடுத்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவரை பொறுத்தவரைக்கும் எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகளை சினிமா பாணியில் அதுவும் ஆடியன்ஸை கவரும் வகையில் எப்படி கொடுக்கலாம் என்றே சிந்தித்து படத்தை கொடுத்திருக்கிறார். இதே பாணியை பின்பற்றினால் இன்னும் எத்தனையோ முன்னனி நடிகர்களுடன் நித்திலன் சாமிநாதன் படம் பண்ணும் வாய்ப்பை பெறுவார்.
இதையும் படிங்க: கழண்டு விழுந்திருமோன்னு பயமா இருக்கு!.. கர்ச்சீப் சைஸ் துணியில் அழகை காட்டும் ஜான்வி!…