இமான் பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டிய சிவகார்த்திகேயன்.. செம போட்டோ!
இசையமைப்பாளர் டி. இமான் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலோ, விளக்கமோ கொடுக்காமல் அமைதியாக கடந்து சென்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் தப்பான வேலைகளை பார்த்துள்ளார் என வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்டோர் பஞ்சாயத்தை கிளப்பிய போதும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் வேலைகளை மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கும்தாவா இருக்கியே ஷிவானி!.. அழகு சும்மா ஆள தூக்குதே!.. டைட் டிசர்ட்டில் வெயிட்டு காட்டுறீயே!..
வரும் பொங்கலுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படமும் பின் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அயலான் படம் அசால்ட்டாக வசூல் செய்யும் என்றே தெரிகிறது.
சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படமும் குடியரசு தினத்துக்குத்தான் ரிலீஸ் ஆகிறது. பாலாவின் வணங்கான் மட்டுமே அயலான் படத்துடன் போட்டிக்கு வர போவது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: மாஸ் எண்ட்ரி தெரியும்! ஆனா இது மாஸ் எக்ஸிட்! – பிரதீப் விஷயத்தில் என்ன நடந்தது? உண்மையை சொன்ன யுகி
இமான் கிளப்பிய பிரச்சனைக்கு பிறகு பொதுவெளியில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வரும் படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என சினிமா வட்டார்த்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் டீசர் உள்ளிட்ட அப்டேட்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளியாகும் என தெரிகிறது.