அந்த படத்துல நான் நடிச்சா அஜித் கோபப்படுவார்.. – வந்த வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித். நடிகர் விஜய்க்கு அடுத்து அதிக வசூல் கொடுக்கும் ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் அஜித்.
அவர் நடித்து இந்த வருடம் வெளியான துணிவு திரைப்படமும் கூட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது பெரும் விவாதமாக இருந்து வந்தது.
ஏனெனில் துணிவு படத்திற்கு பிறகு அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் கதை அவருக்கு அவ்வளவாக பிடிக்காத காரணத்தால் தற்சமயம் இயக்குர் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
சிவகார்த்திகேயனிடம் சென்ற விக்னேஷ் சிவன்:
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இந்த கதையில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். ஆனால் அஜித் நடிக்க மறுத்த கதை. இதில் சிவகார்த்திகேயன் நடித்து ஒருவேளை அந்த படம் பெரும் ஹிட் கொடுத்துவிட்டால் அதனால் அஜித்திற்கும் சிவகார்த்திகேயனுக்குமிடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை உணர்ந்த சிவகார்த்திகேயன் அந்த கதையில் நடிக்க விருப்பமில்லை என கூறிவிட்டார். இந்த நிலையில் தற்சமயம் அந்த கதையில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை கமல் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன.