More
Categories: Cinema News latest news

சந்தானத்துக்கு இருக்குற விசுவாசம் சிவகார்த்திகேயனுக்கு இல்லை!.. அமரனை அசிங்கப்படுத்திய பிரபலம்!..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் முதலில் சந்தானத்தை தான் புக் செய்திருந்தனர். சில நாட்கள் அவர் அந்த படத்தில் நடித்து வந்த நிலையில், சிம்பு அழைத்து அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என சொன்னதால், அந்த படத்தில் இருந்து சந்தானம் விலகி விட்டார் என பிஸ்மி கூறியுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து சந்தானத்தை வல்லவன் படத்தின் மூலம் சிம்பு அறிமுகம் செய்த நிலையில், இன்று வரை சிம்புவுக்கு விசுவாசமாக சந்தானம் இருந்து வருகிறார். அதே போல நமக்கும் ஒரு ஆள் வேண்டும் என நினைத்த தனுஷ் அதே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு அழைத்து வந்தவர் தான் சிவகார்த்திகேயன் எனக் கூறியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் மட்டும்தானா?!. நானும் வரேன்!.. ரீ ரிலீஸாகும் கமலின் சூப்பர் ஹிட் திரைப்படம்!..

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களை தனுஷ் தயாரித்து வந்த நிலையில், அதன் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு தனி ரசிகர் கூட்டம் மற்றும் சினிமா நண்பர்கள், ஆலோசகர்கள் என அனைவரும் அதிகரித்த நிலையில், தனுஷை விட்டு சிவகார்த்திகேயன் விலகி விட்டார்.

தனுஷுக்கு போட்டியாக அவருடைய ஆபிஸுக்கு எதிரிலேயே சிவகார்த்திகேயன் ஒரு ஆபிஸ் போட்டிருந்தார் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார். தன்னுடைய தம்பி போல சிவகார்த்திகேயன் இருப்பார் என தனுஷ் நினைத்த நிலையில், தனுஷிடம் சினிமாவை கற்றுக் கொண்டு சிவகார்த்திகேயன் கம்பியை நீட்டி விட்டார் என்று பிஸ்மி கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயனை பார்த்து சீன் போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இந்த படமாவது ஓடணும்னு வயிறாரா வாழ்த்துங்க!

 

Published by
Saranya M

Recent Posts