தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 படங்கள் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளன.
முதல் நாளில் இருந்தே தனுஷின் கேப்டன் மில்லர் முன்னிலையில் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் மட்டுமே தகவல் தெரிவித்து வந்தனர். ஆனால், தனுஷுக்கு மாலை போட்டு முதல் நாளே வெற்றியை கொண்டாடிய கேப்டன் மில்லர் படத்தின் தயாரிப்பாளர் இதுவரை அதிகாரப்பூர்வமாக படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: தனுஷ், சிவகார்த்திகேயனை நெருங்கும் அருண்விஜய்! சத்தமே இல்லாமல் சாதனை செய்யும் ‘மிஷன்’ டீம்
இந்நிலையில், அயலான் படம் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கே சவால் விடும் என அளந்து விட்ட அயலான் படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் இந்த பொங்கல் வின்னர் அயலான் தான் என அதிரடியாக வசூல் அறிவிப்பை வெளியிட்டு தனுஷ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டார்.
அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகை வரைக்குமே 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படமும் 50 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனம் அமைதி காத்து வருகிறது.
இதையும் படிங்க: அத பத்தி பேசுனா அவர் உயிருக்கே ஆபத்து! வடிவேலுவை பற்றி பொங்கி எழுந்த சிங்கமுத்து
மாட்டுப் பொங்கலான நேற்றும் மக்கள் கூட்டம் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தைத் தான் குழந்தைகளுடன் பார்த்து இங்க பொங்கலை அயலான் பொங்கலாக கொண்டாடியுள்ளது. இதுவரை 60 கோடி ரூபாய் வசூலை அயலான் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் 50 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் ரேஸில் தனுஷை சிவகார்த்திகேயன் பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்றே தெரிகிறது. சத்ய ஜோதி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் தெரியும்.
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…