வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…

Published on: August 16, 2023
nelson
---Advertisement---

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்தவர் நெல்சன். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே ரசிக்க வைத்தார். கஞ்சாவை வைத்து ரசிக்கும்படி ஒரு திரைக்கதை அமைத்திருந்தார். நயன்தாராவும், யோகிபாபுவும் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நெல்சனின் பிளாக் காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது.

அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில்தான் பிரியங்கா மோகன் அறிமுகமானார். மேலும், யோகிபாபு, கிங்ஸ்லி, விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திலும் நெல்சனின் பிளாக் காமெடி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருந்தது. இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: தளபதிக்கு வில்லனாகும் தல… அதிரவைக்கும் மாஸ் காம்போ… வெங்கட் பிரபு படத்தின் அதிரடி!

அதன்பின் விஜயை வைத்து நெல்சன் இயக்கிய திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திலும் நெல்சனின் பிளாக் காமெடி வொர்க் அவுட் ஆகியிருந்தாலும் இது நெல்சன் படமா, இல்லை விஜய் படமா என்கிற குழப்பத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. ஏனெனில், விஜய்க்காக சில காட்சிகளை நெல்சன் வைத்த காட்சிகள் கிளிஷோவாக மாறிப்போனது.

எனவே, சமூக வலைத்தளங்களில் நெல்சன் கிண்டலடிக்கப்பட்டார். இத்தனைக்கும் வசூல் ரீதியாக பீஸ்ட் வெற்றிப்படம்தான். அது தெரிந்துதான் அவரின் இயக்கத்தில் நடிக்க ரஜினி சம்மதம் சொன்னார். அப்படி உருவான திரைப்படம்தான் ஜெயிலர் கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் 6 நாட்களில் ரூ.400 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: காக்கா, பருந்து கதைக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விஜய்! ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

அதோடு, விக்ரம் படத்தின் வசூலை தாண்டிவிட்டதாகவும், பொன்னியின் செல்வன் வசூலையைம் தொட்டுவிடும் எனவும் திரையுலகில் பேசி வருகின்றனர். எனவே, இப்போது இயக்குனர் நெல்சன் ஸ்டார் இயக்குனராக மாறிவிட்டார். எனவே, திரையுலகில் பலரும் அவருக்கு தூதுவிட்டு வருகின்றனர்.

இதில், முதல் நாளாக நடிகர் சிவகார்த்திகேயன் நெல்சனை தொடர்பு கொண்டு ‘அண்ணே நாம மறுபடியும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’ என துண்டை போட்டிருக்கிறாராம். விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் வேலை செய்தபோதே நெல்சனுடன் நெருங்கிய பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நெல்சன் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!..

இதையும் படிங்க: கடந்த 3 வருடங்களாக தியேட்டர்களை வாழ வைத்த 3 நடிகர்கள்.. 3 படங்கள்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.