அருவா இயக்குனரை ஆப் செய்த சிவகார்த்திகேயன்....எல்லாம் யானை செஞ்ச வேலை...
சினிமாவை பொறுத்தவரை இயக்குனரானாலும் சரி, நடிகரானாலும் சரி வெற்றி கொடுத்தால் மட்டுமே எல்லோரும் தேடி வருவார்கள். தொடர் தோல்விகள் கொடுக்கும் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. அல்லது வாய்ப்புகள் குறைந்து கொண்டே வரும்.
சாமி, சிங்கம் போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. இப்படத்தை பார்த்த ரஜினி, ஹரியின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை.
சிங்கம் 3-யிலிருந்து ஹரிக்கு இறங்கு முகம் துவங்கியது. அதன்பின் மீண்டும் விக்ரமை வைத்து சாமி ஸ்கொயர் படத்தை இயக்கினார். இப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன்பின் மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், ஹரி கூறிய கதை சூர்யாவுக்கு பிடிக்காமல் போக அப்படத்திலிருந்து விலகினார்.
அதன்பின் 4 வருடங்கள் கழித்து அதே கதையை தனது மச்சான் நடிகர் அருண் விஜயை வைத்து இயக்கினார் ஹரி. சமீபத்தில் வெளியான இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஹரி. ஆனால், தன் கையில் நிறைய திரைப்படங்கள் இருப்பதால் இப்போதைக்கு கால்ஷீட் இல்லை..சாரி சார்.. எனக்கூறி மறுத்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
எனவே, அடுத்து எந்த ஹீரோ சிக்குவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம் ஹரி..