திருமணத்தில் தப்பா போன ஃபிராங்க்!.. தலைமறைவான சிவகார்த்திகேயன்!.. அப்பவே அவர் அப்படித்தான்!..

0
673
sivakarthikeyan

Sivakarthikeyan: தொலைக்காட்சியில் ஆங்கராக சில வருடங்கள் வேலை செய்தவர் சிவகார்த்திகேயன். அதற்கு முன் இசைக்கச்சேரிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தார். டிவியில் சில நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக இருந்தார். அப்போதுதான் சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்துள்ளது. பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடி அலைந்தார்.

தனுஷிடம் வாய்ப்பு கேட்க அவர் தயாரித்து நடித்த ‘3’ படத்தில் அவரின் நண்பராக நடிக்க வைத்தார். பாண்டிராஜ் அவரை மெரினா படம் மூலம் ஹீரோவாக்கினார். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு வந்த அடுத்த சோதனை… ஒரு வேளை தனுஷோட வேலையா இருக்குமோ?…

அதன்பின் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றி அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அதன்பின் இப்போது வரை சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பு குறையவில்லை. சில தோல்வி படங்களை கொடுத்தாலும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து மேலே வந்துவிடுவார்.

அதேநேரம், அவர் மீது இசையமைப்பாளர் இமான் சொன்ன புகார் பலரையும் அதிர வைத்தது. சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் அவரின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் எனவும் கூறினார். எனவே, இமானின் விவாகரத்திற்கு காரணமே சிவகார்த்திகேயன்தான் என பலரும் நினைக்க துவங்கினார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்ததால் அந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதனால், படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல், வெளி நிகழ்ச்சிகளுக்கும் வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

இதையும் படிங்க: ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் வசூல் இத்தனை கோடியா..? ஜப்பான் படத்தினை தூக்கி சாப்பிட்ட பக்கா சம்பவம்..!

இந்நிலையில், அவர் வாலிப வயதில் செய்த பிராங்க் அவரின் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியது பற்றி தெரிந்து கொள்வோம். சிவகார்த்திகேயனுக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவருக்கு திருமணம் நிச்சயமானது. சகோதரியிடம் ஒரு பிராங்க் செய்யலாம் என நினைத்து சிவகார்த்திகேயன் செய்த வேலை குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உண்டு பண்ணிவிட்டதாம்.

என்னடா இது ஜாலியா ஏதோ பண்ண போய் இப்படி ஆகிப்போச்சே’ என வீட்டிற்கு கூட போகாமல் ஒரு நாள் இரவு முழுக்க நண்பன் ஒருவனின் வீட்டில் தங்கியிருந்தாராம். அதன்பின் அவரின் குடும்பத்தினர் சமாதானம் ஆகி அவரை வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜய்க்காக இத செஞ்ச நீங்க..! அத ஏன் மிஸ் பண்ணீங்க..! எஸ்.ஏ.சந்திரசேகரை சீண்டிய பத்திரிக்கையாளர்..

google news